Janu / 2023 ஜூலை 04 , மு.ப. 10:40 - 0 - {{hitsCtrl.values.hits}}
ராமு தனராஜா
பசறை மொனரும்கல விகாரையின் தேரர் ஒருவரை பசறை நகரில் வைத்து பெண் ஒருவர் தாக்கியதாக குறித்த தேரரினால் பசறை பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு செய்யப்பட்டுள்ளதாக பசறை பொலிஸார் தெரிவித்தனர்.
குறித்த தேரர் விகாரையில் இருந்து தனிப்பட்ட தேவைக்காக இலங்கை வங்கியின் ஏ.டி.எம் இயந்திரத்தில் பணம் வைப்பிலிட சென்ற போது பெண் ஒருவர் தன்னை தாக்கியதாக பசறை பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு செய்து விட்டு பசறை வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வந்துள்ளார்.
தாக்குதலுக்கான காரணம் பூஜை பொருட்களினால் ஏற்பட்டது என பொலிஸார் தெரிவித்துள்ளனர். தாக்கியதாக கூறப்படும் பெண்ணை கைது செய்வதற்கான நடவடிக்கைகளை மேற்கொண்டு வந்துள்ளனர்.
இந்நிலையில் குறித்த தேரர் திங்கட்கிழமை இரவு வைத்தியசாலையில் இருந்து தனிப்பட்ட விருப்பத்தின் பெயரில் விடுப்பு பெற்றுக் கொண்டு வெளியேறி பொலிஸ் நிலையத்திற்கு சென்று தான் கொடுத்த முறைப்பாட்டை திரும்பப்பெற்றுக் கொண்டுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.
8 hours ago
9 hours ago
9 hours ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
8 hours ago
9 hours ago
9 hours ago