2026 மே 02, சனிக்கிழமை

‘தேர்தல் நடத்தும் நேரம் இதுவல்ல’

Editorial   / 2020 ஏப்ரல் 16 , பி.ப. 01:09 - 0     - {{hitsCtrl.values.hits}}

துவாரக்ஷான்

அரசாங்கம், மக்களின் உயிரைக் காக்கவே முயற்சிக்கவேண்டுமே தவிர, தேர்தலை நடத்துவதில் முயற்சிகளை முன்னெடுக்கக்கூடாது என, மலையக மக்கள் முன்னணியின் தலைவரும் நாடாளுமன்ற உறுப்பினருமான வே.இராதாகிருஷ்ணன் தெரிவித்தார்.

இது தொடர்பாக மேலும் கருத்துத் தெரிவித்துள்ள அவர்,

தற்போது நாட்டில் காணப்படும் பிரச்சினையில், பலரும் வேலைகளை இழந்து, வருமானமின்றி வாழ்ந்து வருவதாகக் கூறிய அவர், இவ்வாறான நிலையில் மக்களைப் காப்பாற்றுவது பற்றியே அரசாங்கம் சிந்திக்கவேண்டும் என்றும் தேர்தலை நடத்துவதற்கு உகந்த காலம் இதுவல்ல என்றும் அவர் தெரிவித்தார்.

இதேவேளை, நாடளாவிய ரீதியில் மக்களுக்கு வழங்கப்படும் நிவாரணம், மலையக மக்களுக்கு வந்து சேர்வதில்லை என்ற விடயமே எந்நேரமும் வெளிப்படுத்தப்பட்டு வருவதாகவும் எனவே, இது குறித்து சம்பந்தப்பட்ட அதிகாரிகள் நடவடிக்கை எடுக்கவேண்டும் என்றும் அவர் கோரினார்.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .