2026 ஜனவரி 20, செவ்வாய்க்கிழமை

தொடர்ச்சியாக மலையகம் புறக்கணிப்பு

Ilango Bharathy   / 2021 ஓகஸ்ட் 23 , மு.ப. 07:57 - 0     - {{hitsCtrl.values.hits}}

“ அரசாங்கத்தின் நிவாரணப் பொறிமுறைக்குள் மலையக பெருந்தோட்டப்பகுதிகளில் வாழும் மக்கள் உள்வாங்கப்படாமல், தொடர்ச்சியாக புறக்கணிக்கப்பட்டு வருகின்றனர் எனத் தெரிவித்த கண்டி மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் வேலுகுமார், எனவே, எமது மக்களுக்கு நிவாரணம் வழங்கும் விசேட வேலைத்திட்டமொன்றை பெருந்தோட்டக் கைத்தொழில் அமைச்சும், பெருந்தோட்டக் கம்பனிகளும் இணைந்து முன்னெடுக்க வேண்டும் என்றார்.

இது தொடர்பில் அவர் விடுத்துள்ள அறிக்கையிலேயே மேற்கண்டவாறு தெரிவித்துள்ளார். தொடர்ந்து அந்த அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது.

“கொரோனா வைரஸ் தாக்கத்தின் முதலாவது மற்றும் 2ஆவது அலைகளால் நாடு முடக்கப்பட்ட போது, அரசாங்கத்தால் ஐயாயிரம் ரூபாய் நிதி நிவாரணம் வழங்கப்பட்டது. எனினும் பெருந்தோட்டப்பகுதிகளில் வாழும் மக்களுக்கு இந்நிவாரணம் முறையாக வழங்கப்படவில்லை.

நகரங்கள் மற்றும் கிராமங்களைத்தாண்டி நிதி நிவாரணம் தோட்டப்பகுதிகளுக்கு வரவில்லை. தற்போதும் நாடு முடக்கப்பட்டுள்ள நிலையில், பெருந்தோட்டப்பகுதிகளில் வாழும் மக்களுக்கு கடந்த காலங்களில் வேலை நாட்கள் குறைக்கப்பட்டன. ஆயிரம் ரூபாய் கூட முறையாக வழங்கப்படவில்லை.

அதேபோல பிற மாவட்டங்களுக்கு தொழிலுக்கு சென்றிருந்தவர்களும் தொழில் இழந்து வீடுகளுக்கு வந்துள்ளனர். இதனால் அவர்களின் வாழ்வாதாரம்
பாதிக்கப்பட்டுள்ளது.
 
எனவே, பெருந்தோட்ட மக்களுக்கு நிவாரணம் வழங்க அவசர பொறிமுறை வகுக்கப்பட
வேண்டும்.  தேயிலை சபையின் நிதி கடந்தகாலங்களில் விளம்பர பிரச்சாரங்களுக்காக
பயன்படுத்தப்பட்டது.

அச்சபையிலுள்ள நிதியைக்கூட தற்காலிகமாக நிவாரணத் திட்டத்துக்கு பயன்படுத்தலாம். பெருந்தோட்டப்பகுதிகளில் மரம் வெட்டுதல், சுற்றுலா உள்ளிட்ட இதர விடயங்களால் இலாபமாக பெற்ற பணத்தை தோட்டக் கம்பனிகளும் பயன்படுத்த வேண்டும்.
.
வெற்றிகரமான பொறிமுறை உருவாக்கப்படுமானால் எம்மாலும் நேசக்கரம் நீட்டக்கூடியதாக இருக்கும்.” என அந்த அறிக்கையில் தெரிவித்துள்ளார்.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X