2026 ஜனவரி 20, செவ்வாய்க்கிழமை

தொற்றாளர்களின் எண்ணிக்கையால் திணறும் வைத்தியசாலை

Ilango Bharathy   / 2021 ஓகஸ்ட் 09 , மு.ப. 07:19 - 0     - {{hitsCtrl.values.hits}}

எம். கிருஸ்ணா, ரஞ்சித் ராஜபக்ஷ

நோயாளிகளின் எண்ணிக்கை அதிகரிப்பால் ,டிக்கோயா ஆரம்ப வைத்தியசாலையின்
கொரோனா சிகிச்சை வார்டுகளிலுள்ள கட்டில்களுக்குப் பற்றாக்குறை ஏற்பட்டுள்ளதாகவும்,
நிறைந்து காணப்படுவதாகவும் வைத்தியசாலைத் தகவல்கள் தெரிவிக்கின்றன.

அத்துடன், வைத்தியசாலையின் வெளிநோயாளர் சிகிச்சைப் பிரிவிலுள்ள கதிரைகள் மற்றும்
தரையிலும் நோயாளர்கள் தங்கியிருப்பதாகவும் தெரிவிக்கப்படுகின்றது.

வெளிநோயாளர் பிரிவுக்கு வரும் நோயாளர்களிடம் எழுமாறாக செய்யப்படும் என்டிஜன்
பரிசோதனையில் பலருக்கு தொற்று உறுதி செய்யப்படுவதால் குறித்த வைத்தியசாலையின்
கொரோனா சிகிச்சை வார்டுகள் நோயாளர்களால் நிரம்பி வழிவதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

டிக்கோயா வைத்தியசாலையின் கொரோனா சிகிச்சை வார்டில் 50 கட்டில்களே காணப்படும்
நிலையில், தொற்றாளர்களின் எண்ணிக்கை அதிகரிப்பதாகவும் இதனால் சாதாரண
நோயாளர்களுக்கும் சிகிச்சையளிப்பதில் சிக்கல் ஏற்பட்டுள்ளதாகச் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.

எனவே, எழுமாறான தொற்றாளர்களாக அடையாளம் காண்பவர்களை வீடுகளுக்கு அனுப்பும்
நிலை ஏற்பட்டுள்ளதாகவும், குறித்த வைத்தியசாலைக்கு மேலதிகமாக மஸ்கெலியா பிரதேச
வைத்தியசாலை, தொணடமான் தொழிற்பயிற்சி நிலையம் என்பன கொரோனா சிகிச்சை
நிலையங்களாக மாற்றப்பட்டாலும் இவற்றின் செயற்பாடுகள் மந்தகதியில் காணப்படுவதாகவும் டிக்கோயா வைத்தியசாலையின் வைத்தியர்கள் சுட்டிக்காட்டுகின்றனர்.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X