2026 ஜனவரி 20, செவ்வாய்க்கிழமை

தொழிற்சங்க சம்மேளனத்தை உருவாக்க நடவடிக்கை

R.Maheshwary   / 2021 ஓகஸ்ட் 06 , பி.ப. 04:15 - 0     - {{hitsCtrl.values.hits}}

மலையக மக்கள்  எதிர்நோக்கும் வாழ்வாதாரப் பிரச்சினைகளுக்குத் தீர்வினைப் பெற்றுக் கொடுக்கும் முகமாக, இலங்கை தேசிய தோட்டத் தொழிலாளர் சங்கம் மற்றும்  தமிழ் முற்போக்கு கூட்டணி என்பன இணைந்து, தொழிற்சங்க சம்மேளனம் ஒன்றை உருவாக்குவதற்கான  முதல்கட்ட கலந்துரையாடல் இன்று (6) இடம்பெற்றது.

 இலங்கை தேசிய தோட்டத் தொழிலாளர் சங்கத்தின் தலைமையக்தில் இடம்பெற்ற இக்கலந்துரையாடலில்  4 தொழிற்சங்கங்கங்களைச் சேர்ந்த 8 பாராளுமன்ற உறுப்பினர்கள் கலந்துகொண்டனர்.

பாராளுமன்ற உறுப்பினர்களான ஹரீன் பெர்னாண்டோ, வடிவேல் சுரேஷ், திகாம்பரம், ராதாகிருஷ்ணன், வேலு குமார், உதயகுமார், மனோ கணேசன், சுஜித் பெரேரா ஆகிய உறுப்பினர்களுடன் இணைந்து வரலாறு காணாத சரித்திரப் பயணமாக ,இந்த தொழிற்சங்க சம்மேளனம் அமையவுள்ளதாகவும்  தெரிவிக்கப்பட்டுள்ளது.

 


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X