2026 ஜனவரி 20, செவ்வாய்க்கிழமை

தொழிற்சங்க போராட்டத்துக்கு சுரேஷ் எம்.பி ஆதரவு

Freelancer   / 2021 நவம்பர் 07 , பி.ப. 05:48 - 0     - {{hitsCtrl.values.hits}}

அதிபர், ஆசிரியர் தொழிற்சங்கம் ஒன்றியம் நடாத்தும் போராட்டத்துக்கு இலங்கை தேசிய தோட்டத் தொழிலாளர் சங்கம் தன்னுடைய முழு ஆதரவையும் ஒத்துழைப்பையும் வழங்கும் என, சங்கத்தின் பொதுச் செயலாளரும் பாராளுமன்ற உறுப்பினருமான வடிவேல் சுரேஷ்  தெரிவித்தார் .

ஊடகங்களுக்கு அவர் தொடர்ந்து தெரிவிக்கையில்,

அதிபர், ஆசிரியர்களின் சம்பளப் பிரச்சனை முற்றுப்பெறாத தொடர்கதையாக தொடர்ந்து கொண்டே செல்கின்றது, அதற்கு முழுமையான ஒரு தீர்வு பெற்றுத்தர படுதல் வேண்டும்.

மேலும் வானத்தைத் தொடும் பொருட்களின் விலை ஏற்றத்தால் ஒட்டுமொத்த நாட்டு மக்களும் பல பிரச்சனைகளை சந்தித்துக் கொண்டிருக்கின்றனர். என்னுடைய பெருந்தோட்ட மலையக மக்களும் இதற்கு விதி விலக்கல்ல. 

பெருந்தோட்ட நிர்வாகங்களினால் ஏற்படும் தொழில் பிணக்குகள் மட்டுமல்லாமல், அதிகரித்து வரும் வாழ்க்கைச் செலவினாலும் இன்னோரன்ன பிரச்சனைகளுக்கு முகம் கொடுத்து வருகின்றார்கள்.

இவை அனைத்தையும் முன்னிறுத்தி, நாளை 9ஆம் திகதி நடைபெற இருக்கின்ற எதிர்ப்பு தின போராட்டத்துக்கு மலையக மக்கள் சார்பாக நானும் இலங்கை தேசிய தோட்டத் தொழிலாளர் சங்கமும் முழு ஆதரவையும் தருகின்றோம் என தெரிவித்தார் .


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X