2026 ஜனவரி 23, வெள்ளிக்கிழமை

தொழிற்சாலையில் தளபாடங்களைத் திருடியவர் கைது

Kogilavani   / 2020 டிசெம்பர் 01 , பி.ப. 01:44 - 0     - {{hitsCtrl.values.hits}}

நவி

கம்பளை பொலிஸ் பிரிவுக்குட்பட்ட ஜயமாலப்புர பகுதியிலுள்ள தொழிற்சாலையொன்றில் தளபாடங்களைக் களவாடிய நபரொருவரை,  கம்பளை பொலிஸார், நேற்று (30) கைதுசெய்துள்ளனர்.

திருட்டுடன் தொடர்புடைய நபர் இதுவரை காலமும் தலைமறைவாகியிருந்த நிலையில், கம்பளை பொலிஸின் குற்றத்தடுப்புப் பிரிவினர் மேற்கொண்ட தேடுதல் வேட்டையின்போதே, கொரக்கொய டொன்சைட் பகுதியில் வைத்து நபர் கைதுசெய்யப்பட்டுள்ளார் 

மேசை, கதிரைகள் உட்பட களவாடப்பட்ட பொருள்களும் இதன்போது மீட்கப்பட்டுள்ளன. 

கம்பளை பொலிஸ் நிலையத்தின் பொறுப்பதிகாரி  சம்பத் விக்கிரமரத்தினவின் வழிகாட்டலுக்கமைய, குற்றத்தடுப்புப் பிரிவின் பிரதான பொலிஸ் பரிசோதகர் கபில பண்டார தலைமையிலேயே இதற்கான நடவடிக்கைகள் முன்னெடுக்கப்பட்டன. 


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X