2025 ஓகஸ்ட் 24, ஞாயிற்றுக்கிழமை

தொழிலாளர் அல்லாதோருக்கு நிவாரணம் மறுப்பு

Editorial   / 2018 ஜூன் 06 , பி.ப. 04:35 - 0     - {{hitsCtrl.values.hits}}

அக்கரப்பத்தனை நிருபர்

மலையகப் பெருந்தோட்டப் பகுதிகளில் நிலவும் சீரற்ற வானிலையால் ஏற்பட்ட மண்சரிவு உள்ளிட்ட பல்வேறு இயற்கை அனர்த்தங்களால் பாதிப்புக்குள்ளான, பெருந்தோட்டங்களில் பணியாற்றாத மக்களுக்கு உரிய நிவாரணங்கள் கிடைக்கவில்லை என அதிருப்தி வெளியிடப்பட்டுள்ளது.

பெரும்பாலானவர்களுக்கு, தோட்ட நிர்வாகத்தாலும் அரசாங்கத்தாலும் நிவாரண உதவிகள் பெற்றுக்கொடுக்கப்பட்ட போதிலும், தோட்டத்தில் பணியாற்றாத பிற தொழில்களில் ஈடுபடுவர்களுக்கு, எவ்வித நிவாரண உதவிகளும் பெற்றுக்கொடுக்கப்படவில்லையென, பாதிக்கப்பட்டவர்கள் தெரிவிக்கின்றனர்.

சீரற்றகால வானிலையால், அக்கரப்பத்தனை போட்மோர், டயகம, மஸ்கெலியா, காட்மோர் உட்பட பல்வேறு பிரதேசங்களில் இயற்கை அனர்த்தங்கள் ஏற்பட்ட நிலையில், எனினும் அத்தோட்டங்களை வசிப்பிடமாகக் கொண்ட பல குடும்பங்களுக்கு, இதுவரை எவ்வித நடவடிக்கையும் முன்னெடுக்கப்படவில்லை எனவும் இவர்கள் குற்றஞ்சுமத்துகின்றனர்.

குறித்த மக்களின் தற்காலிகத் தங்குமிட ஏற்பாடுகளை மேற்கொள்வதற்குக்கூட, தோட்ட நிரவ்வாகங்கள் மறுத்து வருகின்றனவென, அவர்கள் தெரிவிக்கின்றனர்.

மலைநாட்டு புதிய கிராமங்கள், உட்கட்டமைப்பு மற்றும் சமுதாய அபிவிருத்தி அமைச்சு, இந்த விடயம் தொடர்பில் அவதானம் செலுத்தி உதவிகளைப் பெற்றுக்கொடுக்க நடவடிக்கை எடுத்திருப்பதாகத் தெரிவித்திருந்த போதிலும், தோட்ட நிர்வாகங்கள் இதற்கு முட்டுக்கட்டையாக செயற்படுவகின்றனவென, பாதிக்கப்பட்ட மக்கள் கவலை வெளியிடுகின்றனர்.

இது குறித்து தொழிற்சங்கங்களும் அரசியல் தலைவர்களும் பாராமுகமாக இருந்து வருகின்றனர் எனவும், பாதிக்கப்பட்ட மக்கள் குறிப்பிடுகின்றனர்.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X