Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
R.Maheshwary / 2023 பெப்ரவரி 09 , மு.ப. 09:40 - 0 - {{hitsCtrl.values.hits}}
22 பிராந்திய கம்னிகளிலும் பதிவு செய்யப்ட்ட நிரந்தர தொழிலாளர்களாக ஒரு இலட்சத்து 15 ஆயிரம் பேரே இருக்கின்றனர். எனினும் இவர்களைச் சார்ந்து தோட்டங்களில் வதியும் சுமார் பத்து இலட்சம் பேருக்கான வாழ்வாதாரத்தை நாம் வழங்கி வருகின்றோம்.
அதேவேளை தொழிற்சங்கங்கள் கூறும் காலனித்துவ கால வேதன முறைமைகள் எவ்விதத்திலும் இக்காலத்துக்கு பொருந்தாது. எனவே நவீன காலத்துக்கு ஏற்ப வருமானத்தைப் பெற்றுக் கொள்ளும் வகையில் வேதன முறைமைகளில் சீர்திருத்தங்கள் கொண்டு வரப்பட வேண்டும் என முதலாளிமார் சம்மேளனத்தில் தலைவர் சேனக்க அலவத்தேகம தெரிவித்தார்.
ஒவ்வொரு தோட்டத் தொழிலாளிக்கும் நிலையான வாழ்வாதாரத்தைப் பாதுகாப்பதற்கான ஊதிய சீர்திருத்தம் என்ற தலைப்பில் முதலாளிமார் சம்மேளன பிரரதிநிதிகள் பங்கு கொண்ட வட்டமேசை அமர்வு கடந்த 31ஆம் திகதி கொழும்பு பம்பலப்பிட்டியில் அமைந்துள்ள சம்மேளனத்தின் தலைமையத்தில் இடம்பெற்ற போதே அவர் இவ்வாறு தெரிவித்தார்.
இந்நிகழ்வில் சம்மேளனத்தின் ஊடகப் பேச்சாளர் கலாநிதி ரொஷான் ராஜதுரை உள்ளிட்ட உறுப்பினர்கள் கலந்து கொண்டிருந்தனர். அங்கு தொடர்ந்து உரையாற்றிய சம்மேளனத் தலைவர்.“கடந்த காலங்களில் நாடு எதிர்கொண்ட நெருக்கடிகளின் விளைவுகளுக்கு அனைவரும் முகங்கொடுத்து வருகின்றோம். பெருந்தோட்ட தொழிற்றுறை குறித்து எம்மீது பலரும் விமர்சனங்களை முன்வைத்தனர்.
இரசாயன உர மாபியாக்கள் என எம்மை விமர்சித்தனர். இப்போது அனைவருக்கும் நிலைமைகள் விளங்கியிருக்கும். உலகில் எந்த நாடும் 100 வீத இயற்கை உர விவசாயத்துக்கு மாறவில்லை. எமது நாடு ஒரே இரவில் அவ்வாறு மாற முயற்சித்ததால் ஏற்றுமதி உற்பத்தியான தேயிலை மாத்திரமின்ற உள்ளுரிலேயே காய்கறி தட்டுப்பாடும் ஏற்பட்டது. அந்த பாதிப்பு இன்னும் தொடர்கின்றது.
தொழிலாளர்களின் நாட்சம்பளம் தொடர்பில் அனைவரும் கதைக்கின்றனர். கருத்துத் தெரிவிக்கின்றனர். அவர்களுக்கு அதிக வருமானம் தரக்கூடிய உற்பத்தி சார்ந்த முறைகள் குறித்து எவரும் பேசுவதில்லை. இதை தொழிற்சங்கங்களும் புரிந்து கொள்வதில்லை என்பது வேதனைக்குரியது. ஆனால் எமது பல தோட்டங்களில் இந்த உற்பத்தி சார்ந்த தொழிற்றுறை வெற்றியளித்துள்ளது.
கடந்த காலங்களில் நாம் முன்மொழிந்தவற்றுக்கு இந்த முறையை செயற்படுத்த எமக்கு ஆதரவு நல்கியிருந்தால் வேதன பேச்சுவார்த்தையில் அரசாங்கம் தலையிட வேண்டிய அவசியம் இருக்காது.
எனவே இக்காலத்துக்கேற்ப உலகில் தேயிலையை உற்பத்தி செய்யும் நாடுகள் தொழிலாளர்களுக்கு வருமானத்தை பெற்றுக் கொடுக்கும் வழிமுறைகள் குறித்து நாம் ஆராய வேண்டியுள்ளது. இதற்கு தொழிற்சங்கங்கள் உட்பட அரசாங்கத்தினதும் ஆதரவு அவசியமாகும்.” என தெரிவித்தார்.
3 hours ago
5 hours ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
3 hours ago
5 hours ago