2025 மே 12, திங்கட்கிழமை

தொழிலாளர்களின் வீடுகளை நிர்வாகங்களுக்கு வழங்க தேவையில்லை; சக்திவேல்

Janu   / 2023 ஜூலை 20 , பி.ப. 01:05 - 0     - {{hitsCtrl.values.hits}}

எஸ். கே. குமார்

அக்கரப்பத்தனை பெல்மோரல் தோட்டத்தின் தோட்ட முகாமையாளரி னால் மூடி கிடக்கும் தோட்ட தொழிலாளர்களின் வீடுகளை தோட்ட முகாமையாளருக்கு கையளிக்குமாறு ஒட்டப்பட்ட அறிவித்தல் தொழிற்சங்க சட்டத்திற்கு முரணானது. தோட்ட தொழிலாளர்கள் தோட்டத்தில் தொழில் செய்தாலோ அல்லது தொழில்செய்யாவிட்டாலும் மூடி கிடக்கும்  தொழிலாளர்களின் குடியிறுப்புகளை தோட்ட நிர்வாகங்களுக்கு வழங்க முடியாது. என புதன்கிழமை (19)  அக்கரப்பத்தனை பெல்மோரல் தோட்டகாரியாலயத்தில் நடைபெற்ற பேச்சுவார்த்தையின் போது தோட்டநிர்வாகத்திற்கு எச்சரித்து தெரிவித்ததாக இலங்கை தொழிலாளர் காங்கிரஸ் தேசிய அமைப்பாளரும் முன்னாள் மத்திய மாகாணசபை உறுப்பினருமான ஏ.பி. சக்திவேல் தெரிவித்தார்.

அவர் இவ்விடயம் தொடர்பாக மேலும் கருத்து தெரிவிக்கையில்,

"இவ்விடயம் சம்பந்தமாக அமைச்சர் ஜீவன் தொண்டமான் அவர்களின் கவனத்திற்கு கொண்டு வந்ததுடன், அக்கரப்பத்னை பிலாண்டேஷன் பொது முகாமையாளர் அவர்களுடன் இது சம்பந்தமாக கலந்துரையாடினேன்.

அவர் எனக்கு தெரிவித்த கருத்து  நீண்ட காலமாக வீடுகள் இல்லாதவர் கள் அவ்வீடுகளை பெற்று தருமாறு முறையிட்டு கூறியதாகவும்,  சிலர் வீடுகளை வெளி நபர்களுக்கு விற்பனை செய்துள்ளதாகவும், சில வீடுகளில் போதைப்பொருட்கள் விற்பனை செய்வதாக அவருக்கு கிடைத்த தகவல்களை அடுத்து இவ்வாறான ஒரு விளம்பரத்தை ஒட்டியதாக கூறினார், 

இதனால் வீட்டின் உரிமையாளருக்கோ, வீட்டை பூட்டி விட்டு வெளியில் இருப்பவருக்கோ இதன் ஊடாக எந்த வித தொந்தரவோ பிரச்சினைகள் ஏற்பட போவதில்லை. என்றும் விபரங்களை திரட்டுவதற்காக மாத்திரமே இவ்வாறு செய்தேன். என்று அவர் என்னிடம்  கூறியதற்கு அமைய தொழிற்சங்கங்களுடன் கலந்துரையாடமல் இவ்வாறு செய்ய முடியாது என்றும் தொழில்சங்க சட்டங்களுக்கு புரம்பாக இவ்வாறான செயற்பாடுகளை மேற்கொள்ள வேண்டாம். என்று கடுமையாக எச்சரித்ததுடன், தொழிலாளர்களின் மூடி கிடக்கும் வீடுகளை தோட்ட நிர்வாகங்களுக்கு வழங்க தேவையில்லை. இந்த விளம்பரம் தொடர்பாக எவருக்காகவது பிரச்சினைகள் இருக்குமானால் எம்மோடு தொடர்பு கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின் றேன்". என சக்திவேல் மேலும் தெரிவித்தார்.

 


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X