Ilango Bharathy / 2021 ஓகஸ்ட் 16 , மு.ப. 07:45 - 0 - {{hitsCtrl.values.hits}}
வேலுகுமார் எம்.பி தெரிவிப்பு
தோட்டத் தொழிலாளர்களை திட்டமிட்ட அடிப்படையில் ஏமாற்றி, தொழில் சட்டங்களையும், நியதிகளையும் தோட்டக்கம்பனிகள் அப்பட்டமாக மீறிச்செயற்படுவதாகத் தெரிவித்த கண்டி மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் வேலுகுமார், இவற்றை தடுப்பதற்கான தொழிற்சங்க பொறிமுறையும் திருப்திகரமானதாக இல்லை. எனவே, தொழிலாளர்கள் மத்தியில் விழிப்புணர்வு
வேலைத்திட்டம் முன்னெடுக்கப்படும் என்றார்.
ஜனநாயக மக்கள் முன்னணியின் கண்டி அலுவலத்தில் நேற்று (15) நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்துகொண்டு கருத்து வெளியிடுகையிலேயே, அவர் இவ்வாறு கூறினார்.
மேலும் தெரிவித்த அவர், “மலையக பெருந்தோட்டத் தொழிலாளர்களுக்கு அடிப்படை நாட்சம்பளமாக ஆயிரம் ரூபா வழங்கப்பட வேண்டும் என்பது தொடர்பில், வர்த்தமானி அறிவித்தலும் வெளியானது.
இதன்பிரகாரம் அரச விடுமுறை நாட்கள் மற்றும் ஞாயிற்றுக்கிழமைகளில் தொழிலாளர்கள், தொழில்செய்யும்பட்சத்தில் அவர்களுக்கு ஒன்றரை நாள் சம்பளம் வழங்கப்பட வேண்டும் என்ற சட்ட ஏற்பாடும் உள்ளது.
இந்நிலையில் குறித்த சட்டஏற்பாட்டைமீறி, நயவஞ்சக வேலை சூத்திரம், திட்டமிடல் ஊடாக தொழிலாளர்களின் தொழில்சார் உரிமையை தோட்டக் கம்பனிகள் மறுத்துவருவதுடன், மேற்படி வர்த்தமானி அறிவித்தலைகூட பலவீனமடையச்செய்துள்ளன.
இந்த புதிய நடைமுறை தொடர்பில் தொழிலாளர்களுக்கும் போதிய தெளிவின்மையால் இது தொடர்பில் அவர்கள் கேள்வி எழுப்புவதில்லை.
எனவே, இது தொடர்பில் தொழிலாளர்கள் மத்தியில் விழிப்புணர்வை ஏற்படுத்தி,
தெளிவூட்டல்களை மேற்கொண்டு, சட்டரீதியாக அவர்களுக்கு கிடைக்க வேண்டிய உரிமைகளை பெற்றுக்கொடுக்கும் வகையிலேயே தொழிற்சங்க பொறிமுறை செயற்பட வேண்டும்.
அதனை மையமாக கொண்டு செயற்படுவதற்கான எமது செயற்பாட்டு அணுகுமுறையை விரிவுப்படுத்த வேண்டும் என்றார்.
5 hours ago
6 hours ago
8 hours ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
5 hours ago
6 hours ago
8 hours ago