2025 மே 03, சனிக்கிழமை

தொழிலாளர்களை பாதுகாப்பும் தோட்ட நிர்வாகம்

Gavitha   / 2020 டிசெம்பர் 17 , பி.ப. 01:15 - 0     - {{hitsCtrl.values.hits}}

துவாரக்ஷான்

டயகம, ஈஸ்ட் தோட்ட முகாமைத்துவம், அங்கு பணிபுரியும் தொழிலாளர்களை கொரோனா வைரஸில் இருந்து பாதுகாக்கும் நோக்கில், ஆயுள்வேத, வைத்திய பொது சுகாதார அதிகாரிகளின் ஆலோசனைகளைப் பெற்று, அனைத்துத் தொழிலாளர்களுக்கும் காலையும் மாலையும் வேது பிடிப்பதற்கான ஏற்பாடுகளை செய்து கொடுத்துள்ளது.

அத்துடன், நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்கும் பொருட்டு, ஆயுள்வேத மருந்துகள் கலந்த பானத்தையும் பருகுவதற்கு வழி செய்து கொடுத்துள்ளது.

இதற்கமைய, குறித்த தோட்டத்தில் 3 பிரிவுகளில் பணிபுரியும் சுமார் 1,500 தொழிலாளர்களுக்கும் இங்குள்ள சிறுவர்களுக்கும் முதியர்களுக்கும் வேது பிடிக்கும் செயற்றிட்டம் நடைமுறைப்படுத்தப்பட்டுள்ளது.

தொழிலாளர்கள் தேயிலை கொழுந்து நிறுக்கும் மடுவத்திலும் ஏனையவர்கள் பொது இடங்களிலும் குறித்த வேது பிடிப்பதற்கான ஏற்பாடுகள் செய்து கொடுக்கப்பட்டுள்ளன.

இந்த வேது பிடித்தல் ஆயர்வேத கலவையில், நொச்சி, ஆடதோடை, மஞ்சள், இஞ்சி, வசம்பு, தேசிக்காய் இலை, கொய்யா இலை, கொட்ட முத்து இலை போன்றன அடங்குகின்றன.

இவர்களுக்கு நோய் எதிர்ப்பு சக்தி பெற்றுக்கொடுப்பதற்காக, தேநீருக்கு பதிலாக கொத்தமல்லி, இஞ்சித் தேநீர் ஆகியனவும் வழங்கப்படுகின்றன.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X