2025 ஜூலை 20, ஞாயிற்றுக்கிழமை

’தொழிலாளர்களையும் உள்ளீர்க்கவும்’

Freelancer   / 2023 ஏப்ரல் 19 , மு.ப. 07:30 - 0     - {{hitsCtrl.values.hits}}

அரச நிவாரண திட்டங்களுக்குள் பெருந்தோட்ட தொழிலாளர்களை உள்ளீர்ப்பதற்கு நடவடிக்கை மேற்கொள்ளுங்கள். என மாவட்ட செயலாளர்களை கல்வி இராஜாங்க அமைச்சர் அருணாசலம் அரவிந்தகுமார் அறிவுறுத்தியுள்ளார். 

குறைந்த வருமானம் ஈட்டுவோரின் பட்டியலுக்குள் பெருந்தோட்டத் தொழிலாளர்களையும் உள்ளீர்த்து அவர்களுக்கும் அரச வாழ்வாதார நிவாரணங்களைப் பெற்றுக் கொடுப்பதற்கு நடவடிக்கை மேற்கொள்ளுமாறு கோரியுள்ளார். 

பெருந்தோட்டங்கள் அடங்கிய பதுளை, மொனராகலை, நுவரெலியா, கண்டி, மாத்தளை, இரத்தினபுரி, கேகாலை, களுத்துறை மற்றும் கொழும்பு ஆகிய மாவட்ட செயலாளர்களை,  எழுத்துமூலம் அரவிந்தகுமார் வலியுறுத்தியுள்ளார்.

மாவட்ட செயலாளர்களுக்கு அவர் அனுப்பிவைத்துள்ள கடிதத்தில் மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது, 
சிரேஷ்ட பிரஜைகளுக்கான நிவாரணம், சமுர்த்தி நிவாரணம், நோயாளர்களுக்கான நிவாரணம், குறை வருமானம் பெறுவோருக்கான நிவாரணம் மற்றும் ஏனையோருக்கான நிவாரணம் என பல்வேறு தரப்பினருக்கு அரச நிவாரணங்கள் வழங்கப்பட்டு வரும் அதேவேளை இந்நாட்டில் மிகக்குறைந்தளவிலான வருமானத்தை ஈட்டி வறுமைக்கோட்டின் கீழ் வாழும் பெருந்தோட்டத் தொழிலாளர்களுக்கு எந்தவிதமான அரச நிவாரணங்களும் வழங்கப்படுவதில்லை என்பதை தங்களது கவனத்துக்கு கொண்டுவர விரும்புகிறேன். 

எமது மக்கள் மீது பகிரங்கமாகவே பாரபட்சம் காட்டப்படுவது அப்பட்டமான மனித உரிமை மீறல் செயற்பாடாகும். மேற்படி நிவாரணங்களை பெற்றுக் கொள்ள தகுதி வாய்ந்தவர்கள் கிராம புறங்களில் மாத்திரமே என்ற நிலைப்பாடு தவறானது. இந்த நிவாரணங்களை பெற்றுக்கொள்ள அதிக தகுதிகளை கொண்டவர்கள்.

பெருந்தோட்ட பகுதிகளில் வாழ்வோரே. பொருளாதார நெருக்கடிக்கு மத்தியில் வாழும்பெருந்தோட்ட தொழிலாளர்களின் வாழ்வாதாரத்தை மேம்படுத்தும் பொருட்டு அரச நிவாரணங்களை பெற்றுக்கொடுப்பதற்கு நடவடிக்கை மேற்கொள்ளுமாறு பிரதேச செயலாளர்கள், சம்பந்தப்பட்ட அதிகாரிகள் ஆகியோருக்கு முறையான அறிவித்தல்களை வழங்குமாறு தயவாக கேட்டுக்கொள்கிறேன் எனக் குறிப்பிட்டுள்ளார்.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X