2024 மார்ச் 29, வெள்ளிக்கிழமை

`தொழிலாளர்கள் வஞ்சிக்கப்படுகின்றனர்`

Ilango Bharathy   / 2021 ஜூலை 15 , மு.ப. 06:15 - 0     - {{hitsCtrl.values.hits}}

சம காலங்களில் பெருந்தோட்டத் தொழிலாளர்கள் எதிர்நோக்கும் பிரச்சனைகள் தொடர்பாக, சம்பள நிர்ணய சபையின் தீர்மானத்துக்குப் பின்னர், மலையக தொழிலாளர்கள் தொடர்ந்து வஞ்சிக்கப்பட்டுக் கொண்டிருக்கிறார்கள் என, பாராளுமன்ற உறுப்பினரும், இலங்கை தேசிய தோட்டத்தொழிலாளர் சங்கத்தின் பொதுச் செயலாளருமான வடிவேல் சுரேஷ் சுட்டிக்காட்டினார்.

நேற்று முன்தினம் (14) தொழில் அமைச்சில் இடம்பெற்ற தேசிய தொழிலாளர் ஆலோசனைக் குழுக் கூட்டத்தின்போதே அவர் இவ்வாறு தெரிவித்தார்.

இக்கூட்டத்தில் பெருந்தோட்ட நிர்வாக அதிகாரிகளின் அடாவடி செயற்பாட்டின் விளைவாக பெருந்தோட்ட மலையக மக்கள் முகம் கொடுக்கும் பிரச்சனை தொடர்பாக தொழில் அமைச்சரின் கவனத்துக்கு கொண்டு வந்ததாக அவர் தெரிவித்துள்ளார்.

இதன்போது ஒரு மாத்துக்குள், முதலாளிமார் சம்மேளனமும் தொழிற்சங்கங்களும் பெருந்தோட்டத் தொழிலாளர்கள் எதிர்நோக்கும் பிரச்சினைகள் தொடர்பாக புரிந்துணர்வுக்கு
வரவில்லையெனில், பாராளுமன்றத்தில் சட்டம் ஒன்று கொண்டு வரப்படும் எனத் தொழில் அமைச்சர் நிமால் சிறிபால டி சில்வா,உறுதியளித்ததாகக் குறிப்பிட்டார்.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .