2025 மே 04, ஞாயிற்றுக்கிழமை

‘தொழிலாளியின் பிள்ளையை தலைவராக்கியவர் வெள்ளையன்’

Gavitha   / 2020 டிசெம்பர் 03 , பி.ப. 02:43 - 0     - {{hitsCtrl.values.hits}}

எம்.கிருஸ்ணா 

தொழிலாளர் தேசிய சங்கத்துக்கு, தோட்டத் தொழிலாளியின் பிள்ளை ஒருவரே தலைவராக இருக்கவேண்டும் என்ற கொள்கையை உருவாக்கியவர் தொழிற்சங்கத் துறவி அமரர் வி.கே.வௌ்ளையன் என்று, தொழிலாளர் தேசிய சங்கத்தின் பிரதித் தலைவரும் நாடாளுமன்ற உறுப்பினருமான மயில்வாகனம் உதயகுமார் தெரிவித்துள்ளார்.

2021ஆம் ஆண்டுக்கான பட்ஜெட் மீதான விவாதம், நேற்று (02) நாடாளுமன்றத்தில் நடைபெற்றபோது, அதில் கலந்துகொண்டு கருத்துத் தெரிவிக்கும் போதே, அவர் மேற்கண்டவாறு தெரிவித்தார்.

அவர் மேலும் அங்கு உரையாற்றும்போது, தொழிலாளி ஒருவரின் பிள்ளை தலைவராக இருக்கவேண்டும் என்ற கொள்கையை உருவாக்கி, தலைமைப் பதவியை தொழிலாளியின் பிள்ளை கையில் ஒப்படைத்து, சங்கத்தின் நிருவுனராகவே செயற்பட்ட பெருமைக்கு உரியவரே அவர் என்று அவர் கூறினார்.

"தொழிலாளர் தேசிய சங்கத்தின் நிறுவனர் தொழிற்சங்கத் துறவி அமரர் வி. கே வெள்ளையனின் 49ஆவது சிரார்த்த தினமான இன்று, மலையக மக்கள் தொடர்பில் நாடாளுமன்றத்தில் பேச கிடைத்தமை தொடர்பில் மகிழ்ச்சி அடைகிறேன்" என்றும் அவர் தெரிவித்தார்.

மலையக பெருந்தோட்டத் தொழிலாளர்களின் உரிமைகளைப் பாதுகாக்கும் நோக்கில், வி.கே.வௌ்ளையன் தொழிலாளர் தேசிய சங்கத்தை நிறுவினார் என்றும் அவர் இதன்போது தெரிவித்தார்.

விளையாட்டுத்துறை மற்றும் கல்வித்துறையில் அவர் பெற்ற பெறுபேறுகள் மற்றும் திறமைகள் காரணமாக, வி.கே.வௌ்ளையனுக்கு பல உயர் இடங்களில் இருந்து தொழில் வாய்ப்புக்கள் வந்தபோதும், அவற்றை எல்லாம் புறந்தள்ளி, தொழிலாளர்களின் உரிமைக்காகப் போராடுவதற்கு என, தொழிற்சங்ப் புரட்சியாளராக தன்னை மாற்றிக்கொண்டார் என்றும் அவர் கூறினார்.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X