2024 ஏப்ரல் 19, வெள்ளிக்கிழமை

தொழில் ஆணையாளருக்குக் கடிதம்

Ilango Bharathy   / 2021 ஜூன் 16 , மு.ப. 06:26 - 0     - {{hitsCtrl.values.hits}}

கொரோனா வைரஸ் தொற்றுக்கு மத்தியில் பெருந்தோட்டத் தொழிலாளர்கள்
எதிர்நோக்கும் பிரச்சினைகளுக்கு விரைவாகத் தீர்வு வழங்கப்பட வேண்டுமென
தொழிலாணையாளரிடம் வலியுறுத்தியுள்ள தோட்ட தொழிலாளர் நிலையம்,
இதுத் தொடர்பில் கலந்துரையாடுவதற்கு கலந்துரையாடலொன்றை பெற்றுத்
தருமாறும் கோரிக்கை விடுத்துள்ளது.



இது தொடர்பில் தோட்ட தொழிலாளர் நிலையம் தொழில் ஆணையாளருக்கு
எழுதியுள்ளக் கடிதத்தில் கொரோனா வைரஸ் நிலைமைகளால் நாட்டில்
பயணக்கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டுள்ளபோதிலும், தொழிலாளர்கள்
எவ்விதமானப் பாதுகாப்பு முறைகளுமின்றி தொழில் செய்து வருகின்றமை,
தொழிலாளர் உள்ளிட்ட ஏனையோருக்கும் தடுப்பூசிகளை விரைவாக வழங்க
வேண்டும். தொற்றுக் காரணமான தனிமைப்படுத்தப்பட்ட, சிகிச்சைப் பெற்று
வரும் தொழிலாளர்களுக்கு சம்பளத்துடன் கூடிய விடுமுறையை வழங்க
வேண்டும்,

நாளாந்த சம்பளமாக ஆயிரம் ரூபாயை வழங்குவதில் பெருந்தோட்டக்
கம்பனிகள் அநீதியான முறையில் நிபந்தனைகளை முன்வைக்கக்கூடாதெனவும்
கோரிக்கைகள் முன்வைக்கப்பட்டுள்ளன.

இதேவேளை தோட்டத் தொழிலாளர் மத்திய நிலையம் முன்வைத்துள்ள
மேற்படிக் கோரிக்கைகள் தொடர்பில் கலந்துரையாடலொன்றை தொழில்
ஆணையாளர் பெற்றுத் தரவேண்டுமெனவும், இப்பிரச்சினைகளுக்கு விரைவாகத்
தீர்வை பெற்றுக்கொடுக்க நடவடிக்கை எடுக்க வேண்டுமெனவும் அக்கடிதத்தில்
வலியுறுத்தப்பட்டுள்ளது.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .