Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
R.Maheshwary / 2022 நவம்பர் 06 , பி.ப. 04:36 - 0 - {{hitsCtrl.values.hits}}
சுதத்.எச்.எம்.ஹேவா
மஸ்கெலியா பெருந்தோட்ட கம்பனிக்கு சொந்தமான டீசைட் தோட்ட அதிகாரியை பதவி விலகுமாறு கோரி அத் தோட்ட தொழிலாளர்களால் போராட்டம் முன்னெடுக்கப்பட்டது.
தோட்டத் தொழிலாளர்களுக்கு பல்வேறு பிரச்சினைகளை ஏற்படுத்தும் தோட்ட அதிகாரியை அங்கிருந்து வெளியேறுமாறு தெரிவித்து இத்தோட்ட தொழிலாளர்கள் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.
இந்த விடயம் தொடர்பில், தோட்ட அதிகாரி நிரோஷன் தசநாயக்கவிடம் வினவியபோது, பண்டிகைக்கால முற்கொடுப்பனவானது, 06 மாதங்கள் தொடர்ச்சியாக வேலை செய்தவர்களுக்கு மாத்திரமே தனது தோட்டத்தில் முழுமையாக வழங்க நடவடிக்கை எடுத்து வருவதாகவும் இந்த நிலையில், சிலர் பண்டிகை முற்பணம் பெற்றுக் கொள்வதற்காகவே பணிக்கு வருவதுடன், 06 மாதங்களாகப் பார்க்கும் போது முழு முற்பணத்தையும் செலுத்த முடியாமல் தவிக்கின்றனர்.
இவ்வாறான சூழ்நிலையில் தொழிலாளர்கள் அனைவருக்கும் தீபாவளி பண்டிகை முற்பணம் முழுமையாக வழங்குமாறு தொழிற்சங்க பிரதிநிதிகள் இருவர் கோரிய போதிலும், வழங்க முடியாது என தொழிற்சங்க பிரதிநிதிகளிடம் விளக்கமளித்ததையடுத்து, தொழிலாளர்கள் சிலர் தனக்கு எதிராக ஆர்ப்பாட்டத்தை முன்னெடுப்பதாகவும் தெரிவித்தார்.
23 minute ago
2 hours ago
4 hours ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
23 minute ago
2 hours ago
4 hours ago