Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
2025 மே 04, ஞாயிற்றுக்கிழமை
Gavitha / 2020 டிசெம்பர் 02 , பி.ப. 02:05 - 0 - {{hitsCtrl.values.hits}}
ஆ.ரமேஸ்
நுவரெலியா மாவட்டத்தில் வலப்பனை, கொத்மலை, நுவரெலியா ஆகிய பிரதேச செயலகப் பிரிவுகளில், தெரிவு செய்யப்பட்ட தோட்டப் பகுதிகளிலுள்ள அமைப்பகளின் தலைவர்களுக்கு, கொரோனா தொற்று விழிப்புணர்வு நடத்தப்பட்டது.
யூ.என். ஹெபிடாட் நிறுவனத்தின் ஊடாக, இந்த விழிப்புணர்வு நேற்று (01) முன்னெடுக்கப்பட்டது.
இந்த விழிப்புணர்வு நிகழ்வுக்கான நிதியுதவியை கொரியா சர்வதேச ஒத்துழைப்பு நிறுவனமான கொய்கா நிறுவனம் வழங்கியிருந்தது.
இந்த விழிப்புணர்வு நடவடிக்கையின் வளவாளராக, நுவரெலியா மாவட்ட சுகாதார கல்வி உத்தியோகஸ்தர் நுனி விஜயவிக்கிரம கலந்துகொண்டிருந்தார்.
அந்த வகையில் கொரோனா தொற்று ஏற்படுவதற்கு முன் தற்காப்பு நடவடிக்கைகள், கொரோனாவால் ஏற்படும் தாங்கங்கள் தொடர்பில் விளக்கமளிக்கப்பட்டது.
இவ்வாறு விக்கமளிக்கப்பட்ட விடயங்கள் தோட்டப்பகுதிகளிலுள்ள பொதுமக்களுக்கு சென்றடையும் வகையில், அதற்கான பயிற்சிகளும் வழங்கப்பட்டமை குறிப்பிடத்தக்கது.
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
25 minute ago
2 hours ago
2 hours ago