Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
2025 மே 12, திங்கட்கிழமை
Editorial / 2018 ஜூன் 01 , பி.ப. 04:06 - 0 - {{hitsCtrl.values.hits}}
எஸ்.கணேசன், ஆ.ரமேஷ்
தோட்ட நிர்வாகத்தின் எதேச்சதிகார போக்கைக் கண்டித்து, பொகவந்தலாவ ரொப்கீல் தோட்டத் தொழிலாளர்கள், தோட்டத்திலுள்ள கொழுந்து மடுவத்துக்கு முன்பாக, இன்று காலை ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.
மண்சரிவு அபாயம் காரணமாக பாதிக்கப்பட்டு, இடைத்தங்கல் முகாமில் தங்கவைக்கப்பட்டுள்ளத் தம்மை, இடைத்தங்கள் முகாமிலிருந்து வெளியேறுமாறு, தோட்ட நிர்வாகம் கூறிவருவதாகத் தெரிவிக்கும் தொழிலாளர்கள், தோட்ட நிர்வாகத்தின் இச்செயலைக் கண்டித்தே ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.
கடந்த வருடம் மார்ச் மாதம் 30ஆம் திகதி ஏற்பட்ட சீரற்ற வானிலை காரணமாக, மண்சரிவு மற்றும் வெள்ள அனர்த்தத்துக்கு முகங்கொடுத்த இத்தோட்டத்தின் மூன்று குடும்பங்களைச் சேர்ந்த 15 பேர், அத்தோட்டத்தின் தமிழ் வித்தியாலய ஆசிரியர் விடுதி மற்றும் தோட்ட உத்தியோகத்தர்களின் விடுதிகளில் தங்க வைக்கப்பட்டனர்.
ஒரு வருடமாகியும் பாதுகாப்பான இடத்தில் தமக்கு நிரந்தர குடியிருப்புகளை அமைத்துக்கொடுக்க தோட்ட நிர்வாகம் முன்வரவில்லை என்று தெரிவிக்கும் மக்கள், இத்தகையதொரு நிலையிலேயே, தோட்ட நிர்வாகம் தம்மை இடைத்தங்கள் முகாமிலிருந்து வெளியேறுமாறு கோரிவருவதாகவும் தெரிவித்தனர்.
தோட்ட நிர்வகாத்தின் எதேச்சதிகாரப் போக்கை தாம் வன்மையாகக் கண்டிப்பதாகவும் மேற்படி மக்கள் தெரிவித்தனர்.
இதேவேளை, தமக்கு பாதுகாப்பான பிரதேசத்தில், குடியிருப்பு வசதிகளை ஏற்படுத்திக்கொடுக்க வேண்டுமென்று கோரியுள்ள மேற்படி குடும்பங்கள், குடியிருப்பு வசதிகளை அமைத்துக்கொடுக்கும்வரை, இடைத்தங்கல் முகாம்களிலிருந்து தாம் வெளியேற போவதில்லை எனவும் தெரிவித்தனர்.
ஆர்ப்பாட்டக்காரர்கள் டயர்களை எரித்தும் கோஷமெழுப்பியும் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டதால், அப்பகுதியில் சற்று பதற்றமான நிலை காணப்பட்டது.
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
11 May 2025
11 May 2025
11 May 2025
11 May 2025