Editorial / 2020 ஏப்ரல் 16 , பி.ப. 06:34 - 0 - {{hitsCtrl.values.hits}}
எஸ்.கணேசன்
நாட்டின் தற்போதைய சூழ்நிலையில், பெருந்தோட்டத் தொழிலாளர்களும் பெரிதும் பாதிக்கப்பட்டுள்ளனர் என்றும் வழங்கப்படும் என அறிவிக்கப்பட்ட ஆயிரம் ரூபாய் கூட இழுபறியிலேயே இருந்து வருவதாகவும் தெரிவித்த முன்னாள் இராஜாங்க அமைச்சர் வே.இராதாகிருஷ்ணன், எனவே, தோட்டத் தொழிலாளர்களுக்கு அரசாங்கம் ஏதேனும் ஒரு வழியில் உதவி வழங்க வேண்டும் என்றும் கேட்டுக்கொண்டார்.
ஹட்டனில் இன்று (16) நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்துகொண்டு உரையாற்றும்போதே அவர் இதனைத் தெரிவித்தார். அங்கு தொடர்ந்துரைத்த அவர், பெருந்தோட்டத் தொழிலாளர்களுக்கு, நாட் சம்பளமாக ஆயிரம் ரூபா வழங்கப்படும் என கொரோனா விவகாரம் சூடுபிடிப்பதற்கு முன்னரே அறிவிக்கப்பட்டிருந்தது என்றும் எனினும், கொரோனா தாக்கத்தால், அதனை வழங்க முடியாமல் இருப்பதாக தற்போது அறிவிக்கப்படுவதாகவும் அவர் தெரிவித்தார்.
தோட்டத் தொழிலாளர்கள், இன்று பெரிதும் பாதிக்கப்பட்டுள்ளனர் என்றும் தோட்ட நிர்வாகங்களால் 3 அல்லது 4 நாள்களே வேலை வழங்கப்படுவதாகவும் சுட்டிக்காட்டியதுடன், இதனால் குறைந்தளவு சம்பளமே கிடைப்பதாகவும் தெரிவிதார்.
பொருளாதார ரீதியில் பாதிக்கப்பட்டுள்ள அவர்களுக்கு, அரசாங்கம் ஏதேனும் விதத்தில் மானிய அடிப்படையிலாவது உதவி வழங்க வேண்டும் என்றும் கேட்டுக்கொண்டார்.
'அதேபோல் தோட்டப் பகுதிகளில் இருந்து கொழும்பு உட்பட வெளிமாவட்டங்களுக்கு தொழிலுக்கு சென்றவர்கள், தொடர் ஊரடங்கு சட்டத்தால் பாதிக்கப்பட்டுள்ளனர். இவர்களுக்கு வருமானம் இல்லை. அவர்களை நம்பி இருக்கும் குடும்பத்தார் இங்கு தவிக்கின்றனர். எனவே, இவர்கள் தொடர்பிலும் கவனம் செலுத்தப்பட வேண்டும் என்றும் வலியுறுத்தினார்.
28 minute ago
8 hours ago
02 May 2026
02 May 2026
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
28 minute ago
8 hours ago
02 May 2026
02 May 2026