Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
2025 மே 12, திங்கட்கிழமை
Kogilavani / 2020 ஒக்டோபர் 22 , பி.ப. 07:49 - 0 - {{hitsCtrl.values.hits}}
பெருந்தோட்டப் பகுதிக்குள் வெளியாள்கள் புகுவதை எவ்விதத்திலும் அனுமதிக்க முடியாது என்றுத் தெரிவித்துள்ள தொழிலாளர் தேசிய சங்கத்தின் தலைவரும் நுவரெலியா மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினருமான பழனி திகாம்பரம் தெரிவித்தார், இந்நிலைமைத் தொடர்ந்தால் மக்களை இணைத்துக் கொண்டு போராட வேண்டி ஏற்படும் என்றும் தெரிவித்தார்.
'பொகவந்தலாவ கொட்டியாகலை தோட்டத்தில், வெளிமாவட்டத்தைச் சேர்ந்த ஒருவர் எரிபொருள் நிரப்பு நிலையத்தை அமைக்கும் முயற்சியில் ஈடுபட்டுள்ளதுடன். அந்தத் தோட்டத்துக்குள் அத்துமீறி நுழைந்து தேயிலைச் செடிகளை அப்புறப்படுத்தும் முயற்சியில் ஈடுபட்டுள்ளார். இதனை நான் வண்மையாகக் கண்டிகின்றேன்' என்றும் திகாம்பரம் எம்.பி மேலும் தெரிவித்துள்ளார்.
'இதற்கு தோட்ட மக்களும் எதிர்ப்புத் தெரிவித்துள்ளனர். எனவே, தோட்டப் பகுதிகளில் இவ்வாறானச் சம்பவங்கள் தொடர்ந்து இடம்பெறுமானால், மக்களோடு இணைந்து போராட வேண்டிய நிலைமை ஏற்படலாம்' என்றும் அவர் தெரிவித்துள்ளார்.
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
1 hours ago
1 hours ago
2 hours ago