Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
2025 மே 13, செவ்வாய்க்கிழமை
Freelancer / 2023 ஏப்ரல் 20 , பி.ப. 05:00 - 0 - {{hitsCtrl.values.hits}}
உலக தொழிலாளர் தினமான மேதினத்தை இம்முறை பெருந்தோட்ட வாரியாக நடத்த மலையகத்தில் பிரபல தொழிற்சங்கங்கள் பல தீர்மானித்துள்ளன.
அதேநேரத்தில் மலையகத்தில் இயங்கும் இடதுசாரி அரசியல் கட்சிகள் மற்றும் தொழிற்சங்கங்கள்,உள்ளிட்ட வெகுஜன அமைப்புகள் அத்துடன் தோட்ட சேவையாளர் சங்கம் ஆகியவை பிரதான நகரங்களை தெரிவு செய்து மேதினத்தை நடத்தவுள்ளனர்.
இலங்கை தொழிலாளர் காங்கிரஸ் அதன் மேதினத்தை அந்தந்த தோட்டங்களில் அனுஸ்டிக்கும் என காங்கிரஸின் தேசிய அமைப்பாளரும், முன்னாள் மத்திய மாகாண சபை உறுப்பினருமான எ.பி.சக்திவேல் தெரிவித்தார்.
அதேபோல தொழிலாளர் தேசிய சங்கத்தின் 58வது மேதின நிகழ்வும் இம்முறை தோட்டவாரியாக நடாத்த தீர்மானம் எடுக்கப்பட்டுள்ளதாக சங்கத்தின் நிதி காரியத்தையும் முன்னாள் மத்திய மாகாண சபை உறுப்பினருமான சோ.ஸ்ரீதரன் தெரிவித்தார்.
மேதின நாளன்று தொழிலாளர் தேசிய சங்கத்தின் ஹட்டன் தலைமை காரியாலயத்தில் சங்கத்தின் கொடியேற்றப்பட்டு விசேட பூஜையும் இடம்பெறும் என்றார்.
மலையக மக்கள் முன்னணியின் தொழிற்சங்க பிரிவான மலைய தொழிலாளர் முன்னணி அதன் மேதின நிகழ்வினை தோட்டங்களில் குடியேற்றி அனுஸ்டிக்க தீர்மானித்துள்ளதாக முன்னணியின் தலைவரும் நுவரெலியா மாவட்ட பாராளுமன்ற உறுப்பினருமான வேலுசாமி இராதாகிருஷ்ணன் தெரிவித்தார்.
அதேநேரத்தில் லங்கா தேசிய தோட்ட தொழிலாளர் சங்கம் அதன் மேதின நிகழ்வை இம்முறை பதுளை நகரில் வெகு விமர்சையாக அனுஸ்ட்டிக்க உள்ளதாக சங்கத்தின் பொது செயலாளரும்,பதுளை மாவட்ட பாராளுமன்ற உறுப்பினருமான வடிவேல் சுரேஸ் தெரிவித்தார்.
இந்த மேதின நிகழ்வில் நாடளாவிய ரீதியில் சங்கத்தில் அங்கம் வகிக்கும் உறுப்பினர்கள் உள்ளிட்ட பலர் கலந்துக்கொள்ள உள்ளதாக அவர் நம்பிக்கை தெரிவித்தார்.
நுவரெலியா மாவட்ட முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் சுப்பையா சதாசிவம் தலைமையிலான இலங்கை தொழிலாளர் ஐக்கிய முன்னணியின் மேதின நிகழ்வு குறித்து இன்னும் ஒரிரு தினங்களில் முன்னணியின் முக்கிய உறுப்பினர்கள் ஒன்று கூடி முடிவெடுக்க உள்ளதாக சுப்பையா சதாசிவம் தெரிவித்தார்.
அதேநேரத்தில் மக்கள் விடுதலை முன்னணியின்(ஜே.வி.பி) தொழிற்சங்க பிரிவில் ஒன்றான அகில இலங்கை தோட்ட தொழிலாளர் சங்கம் அதன் பிரதான கட்சியான மக்கள் விடுதலை முன்னணியுடன் இணைந்து தலைநகர் கொழும்பில் மக்கள் பேரணியுடன் மேதினத்தை அனுஸ்டிக்க உள்ளதாக சங்கத்தின் நிதி காரியதர்சி கிச்சன் கலைச்செல்வி தெரிவித்தார்.
அத்துடன் தேசிய ரீதியில் இயங்கும் புதிய ஜனநாயக மார்க்சிச லெனினிசக் கட்சி வடக்கு,கிழக்கு மலையகம் சார்ந்த பகுதிகளில் உள்ள நகரங்களில் மேதின நிகழ்வை நடத்த உள்ளதாக கட்சியின் தேசிய அமைப்பாளர் வெ.மகேந்திரன் தெரிவித்தார்.
அதேநேரத்தில் மலையகத்தில் நடைபெறவுள்ள மேதின நிகழ்வுகள் மாத்தளை மற்றும் இராகலையில் மக்கள் பேரணியுடன் இடம்பெறவுள்ளதாக தெரிவித்த அவர் இராகலையில் இடம்பெறும் மேதின நிகழ்வில் மேதின கோரிக்கைகளும் முன் வைக்க உள்ளதாக தெரிவித்தார்.
அதேபோல இலங்கை தோட்ட சேவையாளர் சங்கத்தின் மேதின நிகழ்வுகள் ஹட்டன் டி.கே.டப்ளியூ மண்டபத்தில் நடைபெறவுள்ளதாக சங்கத்தின் செயலாளர் தெரிவித்தார்.
ஆ.ரமேஸ்
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
11 minute ago
19 minute ago
57 minute ago
1 hours ago