Princiya Dixci / 2015 செப்டெம்பர் 21 , மு.ப. 09:13 - 0 - {{hitsCtrl.values.hits}}
-எம். செல்வராஜா
நாயினால் கடியுண்டு, சிகிச்சை பெறாமலிருந்த கர்ப்பிணிப் பெண்ணொருவர் திடீரென நோய்வாய்ப்பட்டு உயிரிழந்த சம்பவம், ஞாயிற்றுக்கிழமை (20) இடம்பெற்றுள்ளதாக பதுளை மருத்துவமனை வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.
பசறை பிரதேசசபை அலுவலக பணியாளர் மனோரி பிரியதர்சினி (வயது 25) எனும் பெண்ணே இவ்வாறு உயிரிழந்துள்ளார்.
குறித்த பெண் நான்கு மாதக் கர்ப்பிணியென்பது மருத்துவ அறிக்கைளின் போதே தெரியவந்துள்ளது.
கடந்த ஏப்ரல் மாதமளவில் இப்பெண்ணை நாய்கடித்துள்ள போதும் அதற்குரிய உரிய சிகிச்சையைப் பெறாமலிருந்து வந்துள்ளார்.
கடந்த 19ஆம் திகதி திடீரென நோய்வாய்ப்பட்டு பதுளை வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை அளிக்கப்பட்டபோதும் ஞாயிற்றுக்கிழமை (20) உயிரிழந்துள்ளார்.
நாய் கடித்து, சிகிச்சை பெறாததாலேயே அப்பெண் திடீரென நோய்வாய்ப்பட்டு மரணமானதாக, மரண விசாரணையின் போது குறிப்பிடப்பட்டுள்ளது.
இது தொடர்பான விசாரணைகளை பசறை பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.
37 minute ago
46 minute ago
57 minute ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
37 minute ago
46 minute ago
57 minute ago