2026 ஏப்ரல் 06, திங்கட்கிழமை

நிவாரணப் பொருட்கள் கையளிப்பு

Kogilavani   / 2016 ஜூன் 07 , மு.ப. 06:04 - 0     - {{hitsCtrl.values.hits}}

சிவாணிஸ்ரீ

இரத்தினபுரி மாவட்டத்தில் இயற்கை அனர்த்தத்தினால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு நிவாரணப் பொருட்கள் நேற்று(6) கையளிக்கப்பட்டுள்ளன.
சப்ரகமுவ மாகாண ஆளுநர் மார்ஷல் பெரேரா, அவரது ஒரு மாத சம்பளத்தையும், ஆளுநனரின் தனிப்பட்ட அலுவலகத்தில் பணிப்புரியும் உத்தியோகத்தர்களின் மாத சம்பளத்தில் கேகரிக்கப்பட்ட நிதி தொகையும் மற்றும் உலருணவுப் பொருட்கள் என்பன இதன்போது வழங்கப்பட்டன.

இரத்தினபுரி மாவட்ட செயலாளர் பந்துல ஹரிச்சந்திரவிடம் சப்ரகமுவ மாகாண ஆளுநர் மார்ஷல் பெரேரா, இரத்தினபுரி மாவட்ட செயலகத்தில் வைத்து நிவாரண பொருட்களை கையளித்தார்.

இந்நிகழ்வில் இரத்தினபுரி மாவட்ட மேலதிக செயலாளர் தயானந்த கொலம்பகம, ஆளுநரின் ஊடக செயலாளர் தர்ஷன வீரசிங்க மற்றும் ஆளுநர் அலுவலக உத்தியோகத்தர்கள் உட்பட மாவட்ட செயலக அதிகாரிகள் பலரும் கலந்துகொண்டனர்.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .