Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
2025 ஜூலை 05, சனிக்கிழமை
Sudharshini / 2015 நவம்பர் 02 , பி.ப. 12:10 - 0 - {{hitsCtrl.values.hits}}
-டி.ஷங்கீதன்
நுவரெலியா மாநகர சபையின் முதல்வர், மஹிந்த தொடம்பே கமகேவுக்கு நுவரெலியா மாவட்ட நீதிமன்றத்தினால் பிடிவிறாந்து பிறப்பிக்கப்பட்டுள்ளது.
நுவரெலியா மாநகர சபை பிரதி முதல்வர் திஸ்ஸ செனவிரத்னவுக்கு எதிராக மாநகர சபை முதல்வர் மஹிந்த தொடம்பே கமகே தாக்கல் செய்திருந்த வழக்கு, இன்று (2) விசாரணைக்கு எடுத்துகொள்ளப்பட்டது. இந்த வழக்கு விசாரணையில், முதல்வர் மஹிந்த தொடம்பே கமகே ஆஜராக தவறியமையினாலேயே இந்த பிடிவிறாந்து பிறப்பிக்கப்பட்டுள்ளது.
இதுதொடர்பாக நகர முதல்வரிடம் தொடர்புகொண்டு கேட்டபொழுது, தான் கொழும்புக்கு சிகிச்சை ஒன்றுக்காக சென்றிருந்ததாகவும் கொழும்பில் இருந்து தான் அதிகாலையில் புறப்பட்டு வழக்கில் ஆஜராவதற்காக வருகை தந்ததாகவும் ஆனால் தனது வாகனம் இடையில் பழுதடைந்த காரணத்தினால் தனக்கு குறித்த நேரத்துக்கு நீதமன்றில் ஆஜராக முடியாத ஒரு நிலை ஏற்பட்டதாகவும் கூறினார்.
அத்துடன், தான் நீதிமன்றில் ஆஜராவதற்காக சட்டத்தரணி மூலம் முன்பிணை மனு ஒன்றை தாக்கல் செய்துள்ளதுடன் நீதிமன்றில் ஆஜராகவுள்ளதாகவும் கூறினார்.
இந்நிலையில், நாளை (3) காலை நுவரெலியா மாநகர சபை முதல்வர் மஹிந்த தொடம்பே கமகே, நுவரெலியா மாவட்ட நீதிமன்றத்தில் ஆஜராகவுள்ளதாக தெரியவருகின்றது.
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
9 hours ago
04 Jul 2025