2025 ஓகஸ்ட் 17, ஞாயிற்றுக்கிழமை

நகருக்குள் நுழைந்த வாகனங்கள் பரிசோதிக்கப்பட்டன

R.Maheshwary   / 2022 ஒக்டோபர் 10 , பி.ப. 01:42 - 0     - {{hitsCtrl.values.hits}}

கேதீஸ்

நுவரெலியா நகருக்குள் பிரவேசிக்கும் வாகனங்கள் அனைத்தும் இன்றைய  தினம் சோதனைக்கு உட்படுத்தப்பட்டன.

ஏற்கனவே  வாகன புகைப் பரிசோதனையை மேற்கொண்டனவா என்பதைச் பரிசோதித்து, அந்த வாகனங்களில்  புகை வெளியேற்றம்  எவ்வாறு உள்ளது என்பதைக் கண்டறிவதற்காக,  நுவரெலியா பொலிஸார், மத்திய சுற்றாடல் அதிகாரசபை மற்றும் நுவரெலியா மோட்டார் திணைக்களம் இணைந்து வாகனங்களை பரிசோதிக்கும்  நடவடிக்கையை முன்னெடுத்தன.

இதன்போது,  வாகனங்களின் புகை பரிசோதனை மேற்கொள்ளப்பட்டு சாரதிகளுக்கு விழிப்புணர்வூட்டப்பட்டதுடன், வாகனங்களில் காணப்பட்ட  குறைபாடுகளை சரிசெய்வதற்கு உரிய அறிவுறுத்தல்களும் வழங்கப்பட்டன.

இதில்  நுவரெலியா பொலிஸ் நிலைய  பிரதான பொலிஸ் பரிசோதகர் பிரேமலால் ஹெட்டியாராச்சி மற்றும் பொலிஸ் அதிகாரிகள் குழு, மத்திய சுற்றாடல் அதிகார சபை, மற்றும் நுவரெலியா மோட்டார் பரிசோதகர் ஆகியோர் இணைந்திருந்தனர்.

                                                    


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .