Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
Gavitha / 2017 ஏப்ரல் 20 , மு.ப. 10:52 - 0 - {{hitsCtrl.values.hits}}
பாலித ஆரியவன்ச, எம்.செல்வராஜா
பதுளை மாநகர சபையினால் விடுவிக்கப்பட்ட அறிவித்தலுக்கு எதிர்ப்புத் தெரிவித்து, பதுளை, சேனாநாயக வீதியின் நடைப்பாதை வியாபாரிகள், நேற்றுக் காலை ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.
பதுளை சேனாநாயக்க மைதானத்தில், புதுவருட காலத்தில் வியாபாரம் செய்வதற்காக, நடைபாதை வியாபாரிகளுக்கு வழங்கிய அனுமதியை, மாநகர சபை செவ்வாய்க்கிழமையுடன் முடிவுக்கு கொண்டு வந்தது.
கடந்த காலங்களில், மேற்படிப் பகுதியில் வியாபாரம் மேற்கொண்டு வந்த நடைபாதை வியாபாரிகள், நகர அபிவிருத்தியைக் கருத்திற்கொண்டு அப்பகுதியிலிருந்து வெளியேற்றப்பட்டதுடன், இவர்கள் பிரதொரு இடத்தில் வியாபாரம் செய்தவதற்கு ஏற்றவகையில், வியாபார நிலையங்களும் அமைத்துக் கொடுக்கப்பட்டுள்ளன.
இந்நிலையில், புத்தாண்டு வியாபாரத்தை கருத்திற்கொண்டு, மேற்படி பகுதியில் தற்காலிமாக வியாபாரம் செய்வதற்கான அனுமதியை, பதுளை மாநகர சபை வழங்கியிருந்தது. இவர்களுக்கு வழங்கப்பட்ட காலஅவகாசம் முடிவுக்கு வந்தமையால், நடைபாதை வியாபாரிகள் அங்கிருந்து வெளியேற்றப்பட்டனர்.
இதற்கு எதிர்ப்புத் தெரிவித்தே நடைபாதை வியாபாரிகள், நேற்று ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.
புதிய இடத்துக்கு மாற்றப்பட்டுள்ளதால், தமது வழமையான வியாபாரம் பாதிக்கப்பட்டுள்ளதாக தெரிவித்த அவர்கள் மீண்டும் இப்பகுதியிலேயே வியாபாரம் செய்வதற்கான அனுமதியை, மாநகர சபை வழங்க வேண்டுமென கோரினர்.
மாநகர சபையினால் அமைத்துக்கொடுக்கப்பட்ட விற்பனை நிலையங்களில், பொருட்களை வைத்து விற்பனை செய்யக்கூடிய அளவுக்கு, இடவசதிகள் போதுமானதாக இல்லை என்றும் ஆர்ப்பாட்டக்காரர்கள் தெரிவித்தனர்.
“புதிததாக வியாபார நிலையங்கள் அமைக்கப்பட்ட இடத்தில், 91 வியாபார நிலையங்கள் அமைக்கப்பட்டிருக்க வேண்டும். ஆனால், பதுளை மாநகர சபை, 45 வியாபார நிலையங்களையே, அமைத்துக்கொடுத்துள்ளது. இதனால், வியாபார நிலையங்கள் கிடைக்கப்பெறாத வியாபாரிகள், பாரிய பொருளாதார பிரச்சினையை எதிர்கொண்டுள்ளனர்” என மேற்படி நடைபாதை வியாபாரிகள் தெரிவித்துள்ளனர்.
3 hours ago
5 hours ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
3 hours ago
5 hours ago