Freelancer / 2023 ஏப்ரல் 04 , பி.ப. 05:17 - 0 - {{hitsCtrl.values.hits}}
சுமணசிறி குணத்திலக்க
17 வயதான சிறுமி, அவருடைய காதலனின் நண்பனால் பாலியல் துஷ்பிரயோகத்துக்கு உட்படுத்தப்பட்ட சம்பவம், மொனராகலை பிரதேசத்தில் இடம்பெற்றுள்ளது.
அந்த சிறுமி, தன்னுடைய காதலனின் வீட்டுக்கு கடந்த 3ஆம் திகதியன்று சென்றுள்ளார். அன்று, அவசர வேலை நிமித்தம் வீட்டை விட்டு காதலன் வெளியே சென்றிருந்துள்ளார்.
அப்போது, அங்கு வந்த காதலனின் நண்பன், தனது நண்பன் தொடர்பில் விசாரித்துள்ளார். அவர் வெளியே சென்றுள்ளார் என சிறுமி கூற, புகைப்பொருளை பற்றவைப்பதற்காக நெருப்பை கேட்டுள்ளார்.
அந்த சிறுமியும் தீப்பெட்டியை எடுப்பதற்காக வீட்டுக்குள் சென்றபோது, பின்னாலே சென்ற அந்தநபர், அச்சிறுமியின் வாயை பொத்தி, வீட்டுக்குள்ளேயே தள்ளிக்கொண்டுச் சென்று, பாலியல் துஷ்பிரயோகம் செய்துள்ளார்.
தனக்கு நேர்ந்தவற்றை அச்சிறுமி தன்னுடைய மாமியிடம் தெரிவித்துள்ளார். அதன்பின்னர் பொலிஸில் முறைப்பாடு செய்யப்பட்டுள்ளது.
சந்தேகநபர் இனங்காணப்பட்டுள்ளார் எனத் தெரிவித்த பொலிஸார், அவரை கைது செய்வதற்கான நடவடிக்கையில் ஈடுபட்டுள்ளதாக தெரிவித்தனர்.
50 minute ago
15 Jan 2026
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
50 minute ago
15 Jan 2026