Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
2025 ஜூலை 07, திங்கட்கிழமை
Kogilavani / 2017 ஒக்டோபர் 29 , பி.ப. 03:25 - 0 - {{hitsCtrl.values.hits}}
பா.திருஞானம்
“ஊழியர் நம்பிக்கை பொறுப்பு நிதி, ஊழியர் சேமலாப நிதி என்பனவற்றை பெற்றுக்கொள்வதில், தோட்டத் தொழிலாளர்கள் எதிர்கொள்ளும் பல்வேறு பிரச்சினைகளைத் தவிர்த்துக்கொள்ளும் நோக்கில், ஊழியர் நம்பிக்கை பொறுப்பு நிதியத்தின் கிளைக் காரியாலயம், நுவரெலியாவில் திறந்து வைக்கப்பட்டுள்ளது” என்று, கல்வி இராஜாங்க அமைச்சர் வே.இராதாகிருஷ்ணன் தெரிவித்தார்.
தோட்டத் தொழிலாளர்கள், தரகர்களை நம்பி ஏமாற வேண்டிய அவசியம் இனியும் இருக்காது என்றும், இந்தக் கிளைக்காரியாலயத்தின் ஊடாக தோட்டத் தொழிலாளர்கள் தங்களது தேவைகளை நிறைவேற்றிக் கொள்ள முடியுமென்றும் அவர் கூறினார்.
ஊழியர் நம்பிக்கை பொறுப்பு நிதியத்தின் கிளைக்காரியாலயம், இல-164, கண்டி வீதி, நுவரெலியா எனும் முகவரியில், சனிக்கிழமை திறந்து வைக்கப்பட்டது. இந்நிகழ்வில் கலந்துகொண்டு உரையாற்றும்போதே, அவர் இவ்வாறு கூறினார்.
இங்கு மேலும் கூறிய அவர்,
“தோட்டத் தொழிலாளர்களின் அறியாமையை ஆயுதமாக பயன்படுத்தி, அவர்களை ஏமாற்றும் செயற்பாட்டில் தரகர்கள் பலர் செயற்பட்டு வருகின்றனர். போலியான தரகர்களை நம்பி தோட்டத் தொழிலாளர்களும் ஏமாந்து விடுகின்றனர். சிலருக்கு மேற்படி நிதிகள் கிடைக்காமல் போன சந்தர்ப்பங்களும் உள்ளன.
“மேற்படி நிதிகளை பெற்றுக்கொள்வதற்கு கொழும்புக்குச் செல்ல வேண்டியுள்ளது. தகுந்த ஆதாரங்கள் இல்லாமல் விண்ணப்பங்கள் நிராகரிக்கப்பட்டும் உள்ளன. இதனால், தொழிலார்கள் பல இன்னல்களை அனுபவித்து வருகின்றனர். இதனை நிவர்த்தி செய்யும் நோக்கிலேயே, மேற்படிக் காரியாலயம் நுவரெலியாவில் அமைக்கப்பட்டுள்ளது.
இந்தக் கிளைக்காரியாலத்தின் ஊடாக தொழிலாளர்கள் நேரடியாகச் சென்று விண்ணபித்து தங்களது நிதிகளை தாமே பெற்றுக்கொள்ள முடியும். தொழிலாளர்களுக்கு தேவையான அனைத்து ஆலோசனைகளும் வழிகாட்டல்களும் இங்கு வழங்கப்படும். தமிழ்மொழி மூலம் தங்களது தேவைகளை நிறைவேற்றிக் கொள்ள முடியும்” என்றார்.
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
2 hours ago
2 hours ago
2 hours ago