2025 மே 14, புதன்கிழமை

நலன்புரி திட்டத்தில் மக்கள் புறக்கணிப்பு:ஆனந்தன் ஆவேசம்

Freelancer   / 2023 மார்ச் 26 , பி.ப. 09:45 - 0     - {{hitsCtrl.values.hits}}

செ.தி.பெருமாள்

அரசாங்கத்தால் அறிமுகப்படுத்தப்பட்டுள்ள நலன்புரி திட்டத்துக்கான வேலைத்திட்டங்கள் அம்பகமுவ பிரதேச செயலாளர் பிரிவில் முறையாக மேற்கொள்ளப்படவில்லை என குற்றஞ்சாட்டியுள்ள மஸ்கெலியா பிரதேச சபையின் லக்கம் பிரதேச முன்னாள் உறுப்பினர் எம்.பி.ஆனந்தன், இந்த விவகாரத்தில் மக்கள் புறக்கணிக்கப்பட்டுள்ளனர் என்றார்.

விபரங்களை திரட்டுவதற்காக அம்பகமுவ பிரதேச செயலாளர் பிரிவிலுள்ள சகல கிராம உத்தியோகத்தர் பிரிவுகளிலும் க.பொ.த.உயர் தர மாணவ, மாணவிகளுக்கு தேர்வு நடத்தப்பட்டு தெரிவு செய்யப்பட்டனர்.

அவர்கள், கிராமங்கள் மற்றும் தோட்டக் குடியிருப்புகளுக்குச் சென்று நலன்புரி திட்டம் சம்பந்தமாக, எந்தவொரு  விபரங்களையும் திரட்டவில்லை. அந்த திட்டத்துக்கான தகவல் திரட்டு, இம்மாதம் 31 திகதியுடன் நிறைவு பெறுகின்றது. என்றார்.

 ஏனைய மாவட்டங்களை பொறுத்தவரையில், இந்த வேலைத்திட்டத்தை முறையாக முன்னெடுப்பதற்காக, உரிய முறையில் தகவல்கள் திரட்டப்பட்டுள்ளன என்றார். 

எனினும், பெருந்தோட்ட மக்கள் செறிந்து வாழும் பகுதியான அம்பகமுவ பிரதேச செயலாளர் பிரிவில் இதுவரை எந்த விதமான தகவல்களும் சேகரிக்கப்படவில்லை. ஆனால், வறிய கோட்டின் கீழ் வாழும் மக்கள் தொடர்பிலான விபரங்கள்,   இம் மாதம் 31ஆம் திகதிக்கு முன்பாக உரிய அமைச்சுக்கு வழங்கப்படவேண்டுமென அரசாங்கம் அறிவித்துள்ளது.

அம்பகமுவ பிரதேச செயலாளர் பிரிவில் உள்ள பெருந்தோட்ட மக்கள் மட்டும் இந்த தகவல் திரட்டில் கைவிடப்பட்டுள்ளனர். அதன் நோக்கம் என்னவென்பதை சம்பந்தப்பட்ட அதிகாரிகள் மற்றும் அமைச்சர் கவனம் செலுத்த வேண்டும் என்றும் அவர் கோரிக்கை விடுத்தார்.

 


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X