R.Maheshwary / 2021 ஜூலை 06 , பி.ப. 04:34 - 0 - {{hitsCtrl.values.hits}}
எம். செல்வராஜா, சுமணசிறி குணதிலக
கொஸ்லந்தை பொலிஸ் பிரிவிக்குட்பட்ட கெலிபனாவல 10ஆம் ஏக்கர் தோட்டப் பகுதியிலுள்ள மலசலக்கூட குழியிலிருந்து 39 வயதுடைய நபர் ஒருவர் சடலமாக நேற்று (5) மீட்கப்பட்டுள்ளார்.
இவ்வாறு சடலமாக மீட்கப்பட்டவர் 39 வயதுடைய கந்தையா நாகேஸ் என கொஸ்லந்தை பொலிஸார் தெரிவித்தனர்.
குறித்த நபர் காணாமல் போயிருப்பதாக இவரது உறவினர்களால் கொஸ்லந்தை பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு செய்யப்பட்டிருந்த நிலையிலேயே, இவர் சடலமாக மீட்கப்பட்டுள்ளார்.
சடலமாக மீட்கப்பட்ட நபருக்கும் மேலும் இரணடு நபர்களுக்குமிடையில், இந்த மாதம் முதலாம் திகதி வாக்குவாதம் ஏற்பட்டதாகவும், இதன் பின்னரே இவர் காணாமல் போனதாகவும் அவரது உறவினர்கள் தெரிவித்துள்ளனர்.
இந்த நிலையில், குறித்த பிரதேசத்திலுள்ள மலசலக் கூடமொன்றிலிருந்து துர்நாற்றம் வீசுவதாக பிரதேசவாசிகள் பொலிஸாருக்கு வழங்கிய தகவலுக்கமைய, குறித்த குழியை தோண்டிப் பார்த்த போது, இளைஞரின் சடலம் காணப்பட்டுள்ளதுடன், இவர் கொலை செய்யப்பட்டே மலசலக்கூட குழிக்குள் போடப்பட்டிருப்பதாக பொலிஸார் தெரிவித்துள்ளதுடன், இது தொடர்பான மேலதிக விசாரணகைளை முன்னெடுத்து வருவதாகவும் தெரிவித்துள்ளனர்.
7 hours ago
8 hours ago
20 Jan 2026
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
7 hours ago
8 hours ago
20 Jan 2026