2025 மே 14, புதன்கிழமை

நாங்கள் போராடி பெற்றவை இன்று குறைந்து வருகிறது

Freelancer   / 2023 மார்ச் 07 , மு.ப. 02:00 - 0     - {{hitsCtrl.values.hits}}

எஸ். கே. குமார்

மேலதிக தமிழ் கல்வி பணிப்பாளர் நியமனங்களை பற்றி ஊடகங்களில் பலர் பல்வேறு கருத்துக்களை கூறிவருகின்றார்கள்.

இந்த மேலதிக தமிழ் கல்வி பணிப்பாளர்கள் எவ்வாறு உருவாகியது என்பதை பற்றி ஒரு சிலருக்கு இன்னும் தெரியவில்லை என்று இலங்கை தொழிலாளர் ஐக்கிய முன்னணியின் பொதுச் செயலாளரும் முன்னாள் நுவரெலியா மாவட்ட பாராளுமன்ற உறுப்பினருமாகிய சுப்பையா சதாசிவம் தெரிவித்துள்ளார்.

நான் மத்திய மாகாணத்தில் தமிழ்க் கல்வி அமைச்சராக இருந்தபோது, எவ்வாறு போராட்டம் நடாத்தி மேலதிக தமிழ் கல்வி பணிப்பாளர்களை பெற்றோம் என்பது எங்களுக்குத்தான் தெரியும். மத்திய மாகாணத்திலும் ஊவா மாகாணத்திலும் தமிழ் கல்வி அமைச்சை அன்று மறைந்த அமைச்சர் சௌமியமூர்த்தி தொண்டமானும் நானும் போராடித்தான் பெற்றோம் என்றார்.

அவர் இவ்விடம் தொடர்பாக மேலும் கருத்துதெரிவிக்கையில், மத்திய மாகாணத்தில் அன்று இருந்த ஆளுநர் இம்புலான அவர்கள் தமிழ் கல்வி அமைச்சை பிரித்து கொடுக்க முடியாதென கூறினார். அதற்கு முன்னர் அமரர் இராமநாதன் மத்தியமாகாணத்தில் தமிழ், சிங்களம் முழு கல்வி அமைச்சராக இருந்தார்.

அதற்கு பின் அந்த முழு அமைச்சை கேட்ட பொழுது அன்று மத்திய மாகாண முதலமைச்சராக இருந்த டபிள்யூ. பி.பி.திஸாநாயக்க அந்த முழுக் கல்வி அமைச்சை வழங்க முடியாதென மறைந்த முன்னாள் அமைச்சர் சௌமிய மூர்த்தி தொண்டமானிடம் கூறியதையடுத்து மத்திய மாகாண ஆளுநர் காரியாலயத்திற்கு முன்பாக போராட்டம் நடத்திய பின் மறைந்த சௌமியமூர்த்தி தொண்டமானும் நானும்  மத்திய அரசாங்கத்துடன் பேசி மத்திய மாகாணத்திற்கும் ஊவா மாகாணத்திற்கும் தமிழ் கல்வி அமைச்சை பெற்றோம் என்றார்.

அந்த காலத்தில்  நாங்கள் போராடி பெற்ற உரிமைகள் தற்பொழுது குறைந்து வருவதையிட்டு கவலையாக இருக்கின்றது.இன்றைய பாராளுமன்ற உறுப்பினர்கள் அறிக்கை விடுகிறார்களே தவிர உரிமைகளை போராடி பெற்றுக் கொள்வதற்கு சக்தியுள்ளவர்களாக இல்லை. ஊடகங்களில் அறிக்கை விடுவதை விடுத்து, போராடி உரிமைகளை பெற்றெடுக்க வேண்டும் என்றார்.

 


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .