Editorial / 2023 ஏப்ரல் 19 , மு.ப. 10:22 - 0 - {{hitsCtrl.values.hits}}

ஆ.ரமேஸ். செ.திவாகரன்
நானு ஓயா பொலிஸ் பிரிவுக்கு உட்பட்ட கிலாஸோ மேல் பிரிவு தோட்டத்தில் பெட்ரோல் குண்டு தயாரிக்க கூடிய உபகரணங்கள் அடங்கிய பொதி ஒன்றை நானு ஓயா பொலிஸார் கைப்பற்றியுள்ளனர்.
நானு ஓயா பொலிஸாக்கு கிடைத்த தகவலுக்கு அமைய கிலாஸோ தோட்டத்துக்கு செவ்வாய்க்கிழமை (18) மாலை விரைந்த பொலிஸார் தனி வீடொன்றுக்கு அருகில் இருந்து இப் பொதியை கைப்பற்றியுள்ளனர்.
இவ்வாறு கைப்பற்றியுள்ள பொதியில் பெட்ரோல் நிரப்பப்பட்ட போத்தல்கள்,வயர்கள்,முக்கோண பட்டாசுகள் உட்பட பல பொருட்கள் அடங்கியிருந்ததாக பொலிஸார் தெரிவித்தனர்.
கிலாஸோ தோட்ட மேல் பிரிவில் தோட்ட மக்கள் குடியிருப்புகளுக்கு அப்பால் தனியாக வீடு ஒன்று இருக்கிறது.
இந்த வீட்டுக்கு அருகில் வாசல் பகுதியில் கடந்த நான்கு நாட்களாக அனாதரவாக விடப்பட்ட நிலையில் பரிசு பொதிக்கு ஒட்டப்படும் காகிதத்தில் பொதி செய்யப்பட்ட பெட்டி ஒன்று இருந்துள்ளது.
இதை அருகில் உள்ள வீட்டு பையன் ஒருவன் அவதானித்து வந்துள்ளான். யாரும் இப் பெட்டியை எடுத்து செல்லாத நிலையில் சந்தேகம் கொண்ட அப் பையன் பெட்டிக்குள் என்னதான் இருக்கு என பரிசோதித்துள்ளான்.
அப்போது பெட்டியை பிரித்த போது உள்ளே திரவம் நிரப்பப்பட்ட போத்தல்கள்,
மற்றும் வயர்கள்,பட்டாசுகள் இருப்பதை அவதானித்து இது தொடர்பாக அயலவர்களிடம் தெரிவித்துள்ளார். இதுதொடர்பில், நானு ஓயா பொலிஸாருக்கும் தகவல் வழங்கப்பட்டுள்ளது.
இதையடுத்து கிலாஸோ தோட்டத்திற்கு விரைந்த நானு ஓயா பொலிஸார் பொதியை மீட்டதுடன் விசாரணைகளை மேற்கொண்டுள்ளனர்.
44 minute ago
50 minute ago
1 hours ago
2 hours ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
44 minute ago
50 minute ago
1 hours ago
2 hours ago