Kogilavani / 2020 டிசெம்பர் 20 , பி.ப. 03:26 - 0 - {{hitsCtrl.values.hits}}
டி.ஷங்கீதன்
நானுஓயாவிலிருந்து நுவரெலியாவுக்கு புதியப் புகையிரதப் பாதை அமைக்கப்படவுள்ளதாகத் தெரிவித்த வனஜீவராசிகள் மற்றும் வனபாதுகாப்பு அமைச்சர் சீ.பீ.ரட்னாயக்க, இதனால் பழைய புகையிரதப் பாதையில் வசிப்பவர்களுக்கு எவ்விதப் பிரச்சினையும் ஏற்படாது என்றும் தெரிவித்தார்.
நுவரெலியா குதிரைப்பந்தயத் திடலில், சர்வதேச விளையாட்டு மைதானத்தை அமைப்பதற்கான வேலைத்திட்டத்தை, இன்று (20) ஆரம்பித்து வைத்து உரையாற்றும்போதே அவர் இதனைத் தெரிவித்தார். தொடர்ந்துரைத்த அவர், பழைய புகையிரதப் பாதையில் தற்போது வீடுகள் அமைத்துக் குடியிருப்பவர்கள் அங்கிருந்து வெளியேற வேண்டிய அவசியமில்லை என்றும் அவர்களுக்கு எந்தப் பாதிப்பும் ஏற்படாது என்றும் தெரிவித்தார்.
நானுஓயாவிலிருந்து நுவரெலியாவுக்குப் புதிய புகையிரதப் பாதை அமைக்கப்படும் என்றும் அதனூடாக நுவரெலியாவுக்கான ரயில் சேவை முன்னெடுக்கப்படும் என்றும் அவர் தெரிவித்தார்.
அதேபோன்று, பிரதமர் மஹிந்த ராஜபக்ஷ ஆரம்பித்துள்ள மூன்றாம் கட்ட அதிவேகப்பாதை வேலைத்திட்டத்தின் கீழ், கொழும்பிலிருந்து நுவரெலியாவுக்கும் அதி வேகப்பாதை அமைப்பதற்குத் திட்டமிட்டுள்ளதாகவும் தெரிவித்தார்.
நுவரெலியா குதிரைப்பந்தயத் திடலினுள் சகல வசதிகளையும் கொண்ட கிரிக்கெட், கால்பந்தாட்டம், கரப்பந்தாட்டம், வலைப்பந்தாட்டம், ஹொக்கி ஆகிய விளையாட்டுகளுக்கான மைதானங்களும் நீச்சல் தாடகம் அமைக்கப்படவுள்ளதாகவும் தெரிவித்தார்.
ஏற்கெனவே இந்த மைதானங்கள் அமைப்பதற்கு நடவடிக்கை எடுக்கப்பட்டதாகவும் ஆனால் நாட்டில் ஏற்பட்ட ஆட்சி மாற்றத்தால் அந்தப் பணிகள் இடையில் கைவிடப்பட்டதாகவும் தெரிவித்ததுடன், ஆனாலும் இம்முறை இந்த மைதானங்கள் அமைக்கும் பணி இன்னும் ஐந்து வருடங்களுக்குள் பூர்த்தியாகும் என்றும் தெரிவித்தார்.



4 hours ago
7 hours ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
4 hours ago
7 hours ago