Freelancer / 2021 டிசெம்பர் 07 , பி.ப. 06:02 - 0 - {{hitsCtrl.values.hits}}

டி சந்ரு, துவாரக்ஷான்
நானுஒயா பொலிஸ் பிரிவுக்குட்பட்ட நானுஒயா கிளாரண்டன் மேற்பிரிவில் இன்று (07) காலை எரிவாயு அடுப்பு வெடித்துள்ளது.
உணவு தயாரிப்பதற்காக நேற்று காலை, எரிவாயு அடுப்பினை பற்றவைத்த போது குறித்த வெடிப்புச் சம்பவம் இடம்பெற்றுள்ளதாக பாதிக்கப்பட்ட குடும்பத்தினர் தெரிவித்தனர்.
இவ்வெடிப்பு சம்பவத்தில் உயிராபத்துக்களோ, காயங்களோ ஏற்படவில்லை எனவும் சமையலறையும், சமையல் பாத்திரங்களும் மாத்திரமே பாதிக்கப்பட்டதாகவும் தெரியவருகிறது.
குறித்த வெடிப்பு சம்பவம் தொடர்பாக நானுஒயா பொலிஸாருக்கும் அறிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.
எரிவாயு தொடர்பான பிரச்சினைகள் ஏற்படும்போது வாடிக்கையாளர்கள் தேவைகளை நிறைவேற்றுவதற்காக லிட்ரோ நிறுவனத்தால் வழங்கப்பட்ட 1311 என்ற அவசர இலக்கத்தை வீட்டின் உரிமையாளர் சுமார் மூன்று நிமிடம் தொடர்பு ஏற்படுத்த முயற்சித்த போதிலும் சம்பந்தப்பட்ட எரிவாயு உரிமையாளர்களிடம் இருந்து எவ்வித பதிலும் கிடைக்கவில்லை.
5 hours ago
5 hours ago
8 hours ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
5 hours ago
5 hours ago
8 hours ago