2026 ஜனவரி 20, செவ்வாய்க்கிழமை

நான்கு நாள்களாகியும் வீடு திரும்பாத யுவதி

R.Maheshwary   / 2021 செப்டெம்பர் 09 , பி.ப. 02:55 - 0     - {{hitsCtrl.values.hits}}

 டி.சந்ரு, கேதீஸ்

 நுவரெலியா பொலிஸ் பிரிவிற்குட்பட்ட நுவரெலியா கிக்கிலியமான வனப்பகுதிக்கு, இந்த மாதம் 5 ஆம் திகதி விறகு சேகரிக்கச் சென்று காணாமல் போன யுவதியை தேடும் பணிகள் நான்காவது நாளாகவும் இன்று  (9) முன்னெடுக்கப்பட்டன.

நுவரெலியா பிலான்டேஷன் தோட்ட கீழ் பிரிவில் வசிக்கும் ஜெயபாலன் கவிபுகனலானி  என்ற திருமணமாகாத யுவதியே இவ்வாறு காணாமல் போயுள்ளார்.

  “ தன்னோடு விறகு சேகரித்துக் கொண்டிருந்த மகள் அவ்விடத்திலிருந்து எவ்வாறு காணாமல் போனார் என்பது தெரியவில்லை என தெரிவித்துள்ள யுவதியின் தாய், சில மணிநேரம் அவ்விடத்தில் கூக்குரல் இட்டு, மகளை தேடியதாகவும், ஆனால் மகள் பற்றி எவ்வித தகவலும் கிடைக்கவில்லை என பொலிஸாரிடம்  தெரிவித்துள்ளார். 

  காணாமல் போன யுவதி, மனநலம் பாதிக்கப்பட்ட பெண் என்பதுடன், அவரைத் தேடுவதற்காக இன்று (9) விசேட பொலிஸாரும் இராணுவத்தினரும் ஈடுபட்டிருந்தமைக் குறிப்பிடத்தக்கது.

 


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X