Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
Editorial / 2023 மார்ச் 01 , பி.ப. 06:43 - 0 - {{hitsCtrl.values.hits}}
நாயொன்றை வேட்டையாடுவதற்காக வந்த சிறுத்தைப் புலியொன்று தாக்கியதில் கடும் காயங்களுக்கு உள்ளான தோட்டத் தொழிலாளி, டிக்கோயா – கிளங்கன் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். இந்த சம்பவம், பொகவந்தலாவை- டின்சின் தோட்டத்தில் நேற்று (01) இடம்பெற்றுள்ளது.
அந்த தோட்டத்தின் தேயிலை தொழிற்சாலைக்கு அண்மையில் தேயிலைத் தோட்டத்துக்கு இராசயன கலவையை தெளித்துக்கொண்டிருந்த தொழிலாளியின் மீதே, சிறுத்தைப்புலி இவ்வாறு தாக்குதல் நடத்தியுள்ளது.
சம்பவ தினமான இன்று (01) காலை 10 மணியளவில் அவருக்கு மிக அண்மையில் நாயொன்று அபாயக் குரல் எழுப்பியுள்ளது. அந்த திசையை நோக்கி தொழிலாளர் சென்றுள்ளார். அப்போது தன்னுடைய பிடியிலிருந்த நாயை விட்டுவிட்டு, தொழிலாளியை அந்த சிறுத்தை பாய்ந்து தாக்கியுள்ளது. அங்கு பணியிலிருந்த ஏனைய தொழிலாளர்கள் எழுப்பிய சத்ததால், அந்த சிறுத்தை தப்பியோடிவிட்டது.
சம்பவத்தில் காயமடைந்த அவர், பொகவந்தலாவை வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டதன் பின்னர் மேலதிக சிகிச்கைளுக்காக டிக்கோயா-கிளங்கன் வைத்தியசாலைக்கு மாற்றப்பட்டுள்ளார். படுகாயமடைந்த நாய்க்கும் சிகிச்சையளிக்கப்பட்டு வருகின்றது.
இந்தத் தோட்டத்தில் செல்லப்பிராணிகளாக வளர்க்கப்படும் நாய்கள், கோழிகள் அடிக்கடி காணாமல் போவதாகவும் சிறுத்தைகளின் நடமாட்டம் இந்தத் தோட்டத்தில் அதிகமாகுமென தொழிலாளர்கள் தெரிவிக்கின்றனர். ரஞ்சித் ராஜபக்ஷ
40 minute ago
54 minute ago
2 hours ago
2 hours ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
40 minute ago
54 minute ago
2 hours ago
2 hours ago