Janu / 2024 ஏப்ரல் 02 , பி.ப. 12:05 - 0 - {{hitsCtrl.values.hits}}
நாயொன்றிடமிருந்து தப்பிக்க, ஓடிய மான் ஒன்று வீடொன்றில் உள்ள கிணற்றில் தவறி விழுந்து உயிரிழந்துள்ள சம்பவம் திங்கட்கிழமை (01) இடம்பெற்றுள்ளதாக நல்லதண்ணி வனஜீவராசிகள் அலுவலக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
ஹட்டன் காமினிபுர பிரதேசத்தில் அமைந்துள்ள வீடொன்றின் கிணற்றுக்குள் இருந்து சத்தமொன்று கேட்டதால் வீட்டார் சென்று பார்த்தபோது கிணற்றுக்குள் மான் ஒன்று விழுந்திருந்ததாகவும் , அதனை மீட்டு வனஜீவராசிகள் ஆதிகாரிகளிடம்
ஒப்படைப்பதற்காக கூடொன்றுக்குள் வைத்திருந்த நிலையில் உயிரிழந்துள்ளதாக
தெரியவந்துள்ளது .
மேலும் குறித்த மானின் சடலம் நல்லதண்ணி வனஜீவராசிகள் அலுவலக அதிகாரிகளால் செவ்வாய்க்கிழமை (02) காலை எடுத்துச் செல்லப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது .


6 hours ago
8 hours ago
9 hours ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
6 hours ago
8 hours ago
9 hours ago