2025 டிசெம்பர் 16, செவ்வாய்க்கிழமை

நாவலப்பிட்டி, டிக்கோயா வைத்தியசாலைகளில் ஆர்ப்பாட்டம்

Freelancer   / 2023 ஜனவரி 13 , மு.ப. 12:22 - 0     - {{hitsCtrl.values.hits}}

ரஞ்சன் ராஜபக்‌ஷ

டிக்கோயா-கிளங்கன், நாவலப்பிட்டி ஆகிய வைத்தியசாலைகளில் கடமையாற்றும் தாதியர்கள், வியாழக்கிழமை (12) எதிர்ப்பு ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். அந்த ஆர்ப்பாட்டத்துக்கு நோயாளர்களும் தங்களுடைய ஆதரவை நல்கியுள்ளனர். 

ஒரு மணிநேர பகலுணவு நேரத்திலேயே தாதியர்கள் எதிர்ப்பு ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

“வங்கிக் கடன் வட்டி சதவீதத்தை குறை”, “ சம்பாதிக்கும் போது அறவிப்படும் வரியிலிருந்து சுகாதாரதுறையை நீக்கு”,“மின்சாரக் கட்டணத்தை குறை”, “தாதியர் பதவி உயர்வு முரண்பாடுகளை களையவும்”, “நோயாளிகளுக்கு போதிய மருந்து வழங்கு”, “மருத்துவ உபகரணங்களை வழங்கு”, “உணவு மற்றும் பரிசோதனைகளை  வழங்கவும்”, “பணிச்சுமையை குறைக்கவும்”, என்றும் கோஷமிட்டனர்.

இந்த ஆர்ப்பாட்டங்களில் அகில இலங்கை தாதியர் சங்கத்தின் உறுப்பினர்கள் பங்கேற்றனர்.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .