2024 ஏப்ரல் 20, சனிக்கிழமை

நாவலப்பிட்டி நகர சபையின் அதிகாரம் மொட்டு வசமானது

Ilango Bharathy   / 2021 ஜூலை 16 , மு.ப. 06:10 - 0     - {{hitsCtrl.values.hits}}

எம்.கிருஸ்ணா

நாவலப்பிட்டி நகரசபையின் புதிய தலைவராக  அமல் பிரியந்த தெரிவு செய்யபட்டுள்ளார். இந்நிலையில், ஐக்கிய மக்கள் சத்தியின் வசமிருந்த நகரபையின் அதிகாரம் ஸ்ரீலங்கா பொது ஜன பெரமுன வசமாகியது.

நாலப்பிட்டி நகரசபையின் தவிசாளரான ஐக்கிய மக்கள் சத்தியின், சசங்க சம்பத் மத்திய மாகாண ஆளுநரால், பதவி நீக்கம் செய்யப்பட்டு, அது தொடர்பான வர்த்தமானி அறிவித்தல்
வெளியிடப்பட்டதையடுத்து, புதிய தவிசாளரைத் தெரிவு செய்வதற்கான   வாக்கெடுப்பு நேற்று (15) நாலப்பிட்டி நகரசபையில் இடம்பெற்றது.

இதன்போது,  ஐக்கிய மக்கள் சக்தியின் சார்பில் போட்டியிட்டவருக்கு ஐந்து வாக்குகளும் ஸ்ரீலங்கா பொது ஜன பெரமுன சார்பில் போட்டியிட்ட அமல் பிரியங்கரவுக்கு ஏழு வாக்குகளும் கிடைத்துள்ளன.

இதற்கமைய, நகர சபையின் புதிய தலைவரான அமல் பிரியங்க தெரிவு செய்யப்பட்டார்.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .