2025 மே 08, வியாழக்கிழமை

நாவலப்பிட்டி நகர் நீரில் மூழ்கியது

Editorial   / 2020 நவம்பர் 05 , பி.ப. 04:48 - 0     - {{hitsCtrl.values.hits}}

ரஞ்சித் ராஜபக்ஷ

பெருந்தோட்டப் பகுதிகளில், இன்று (5) மாலை பெய்த கடும் மழை காரணமாக, சில பகுதிகள் வெள்ள நீரில் மூழ்கியுள்ளன. 

நாவலப்பிட்டி நகரின் பஸ்தரிப்பிடத்திலிந்து கம்பளைக்கு செல்லும் வழியில் சுமார் 300 மீற்றர் தூரம் நீரில் மூழ்கியுள்ளதால், அப்பகுதிக்கான போக்குவரத்துப் பாதிக்கப்பட்டுள்ளது.

அத்துடன், நாவலப்பிட்டி நகரில் பிரதான பாதைக்கு அருகிலுள்ள வர்த்தக நிலையங்களும் பகுதியளவில் நீரில் மூழ்கியுள்ளன. 

 


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X