2026 ஜனவரி 22, வியாழக்கிழமை

நாவலப்பிட்டியைச் சேர்ந்தவர் கொரோனா தொற்றினால் மரணம்

Kogilavani   / 2021 பெப்ரவரி 07 , பி.ப. 02:05 - 0     - {{hitsCtrl.values.hits}}

எம்.கிருஸ்ணா

கொரோனா வைரஸ் தொற்று காரணமாக, டிக்கோயா கிளங்கன் வைத்தியசாலையில் சிகிச்சை பெற்றுவந்த நபரொருவர், சிகிச்சை பலனின்றி நேற்று (6)  உயிரிழந்துள்ளார். 

கல்லுமலை, ஹப்புகஸ்தலாவ வீதி நாவலப்பிட்டி பகுதியைச் சேர்ந்த 78 வயதுடைய இரண்டு பிள்ளைகளின் தந்தையே இவ்வாறு உயிரிழந்துள்ளார். 

மேற்படி நபர், பொகவந்தலாவை மோரா (தேசிய பெருந்தோட்ட முகாமைத்துவ நிலையம்) கொரோனா சிகிச்சை நிலையத்தில் சிகிச்சை பெற்றுவந்த நிலையில்,  டிக்கோயா கிளங்கன் வைத்தியசாலைக்கு, வியாழக்கிழமை (4) மாற்றப்பட்டுள்ளார்.

இந்நிலையில், கினங்கன் வைத்தியசாலையில் சிகிச்சை பெற்றுவந்த நிலையிலேயே குறித்த நபர் சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளார்.   

 


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X