Kogilavani / 2020 டிசெம்பர் 10 , பி.ப. 01:58 - 0 - {{hitsCtrl.values.hits}}
மொஹொமட் ஆஸிக்
ஹாரிஸ்பத்துவ பிரதேச சபையின் 2021 ஆம் ஆண்டுக்கான நிதி அறிக்கையை நிறைவேற்றுவதற்கு, சபையின் ஐக்கிய தேசியக் கட்சியின் உறுப்பினர்கள் எதிர்ப்புத் தெரிவித்துள்ளனர்.
மேற்படி பிரதேச சபையின் நிதி அறிக்கை, இரண்டாவதுத் தடவையாகவும் சபை தவிசாளர் ஆனந்த ஜயவிலால் தலைமையில், சபையில் நேற்று முன்தினம் முன்வைக்கப்பட்டது.
நிதி அறிக்கை கடந்த 26ஆம் திகதி முதற்றடவையாக சபையில் முன்வைக்கப்பட்போது ஏழு மேலதிக வாக்குகளால் தோல்வியடைந்தது. இந்நிலையில் நேற்று (9) இரண்டாவதுத் தடவையாகவும் நிதி அறிக்கை சமர்ப்பிக்கப்பட்டது.
நிதி அறிக்கையை நிறைவேற்ற வாக்கெடுப்பு அவசிம் என்று, ஐக்கிய தேசிய கட்சியின் உறுப்பினர்கள் கோரியபோது, வாக்கெடுப்பு அவசியம் இல்லை என்றும் தனக்கு வழஙகப்பட்டுள்ள அதிகாரத்தின் பிரகாரம் நிதி அறிக்கையை நிறைவேற்றுவதாகவும் தவிசாளர் தெரிவித்துள்ளார்.
இதன்போது ஐக்கிய தேசிய கட்சி உறுப்பினர்கள் அதற்கு எதிர்ப்பைத் தெரிவித்துடன், இவ்வாறு நிதி அறிக்கையை நிறைவேற்றுவது சட்டவிரோதமானச் செயற்பாடு என்றும் கூறியுள்ளனர்.
இதற்கெதிராக நீதிமன்றம் செல்லவுள்ளதாகத் தெரிவித்ததுடன், சபை அமர்விலிருந்து வெளியேறி தமது எதிர்ப்பைத் தெரிவித்தனர்.
7 hours ago
9 hours ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
7 hours ago
9 hours ago