Editorial / 2018 ஓகஸ்ட் 13 , மு.ப. 11:45 - 0 - {{hitsCtrl.values.hits}}

மொஹொமட் ஆஸிக்
“ஈழத்து அஞ்சலி தேவி” என்றழைக்கப்படும் பிரபல மேடை நாடக நடிகையும் திரைப்பட நடிகையுமான கண்டியூர் சந்திராவின் முதலாம் ஆண்டு நினைவஞ்சலி, கண்டி, கெப்பெட்டிபொல மண்டபத்தில், நேற்று முன்தினம் மாலை நடைபெற்றது.
மக்கள் கலை இலக்கிய ஒன்றியம் ஒழுங்கு செய்திருந்த இந்நிகழ்வில், சமூக அபிவிருத்தி நிறுவனத்தின் நிறைவேற்றுப் பணிப்பாளர் பெ.முத்துலிங்கன், பிரதம அதிதியாகக் கலந்துகொண்டார்.
இதன்போது, கண்டியூர் சந்திராவின் உருவப்படத்துக்கு, திருமதி தாஜுன்னிஸா மஹ்ரூப், சந்திரவதனா ரத்னராஜ குருக்கள் ஆகியோர் மலரஞ்சலி செலுத்தினர்.
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .