R.Maheshwary / 2021 நவம்பர் 12 , மு.ப. 10:01 - 0 - {{hitsCtrl.values.hits}}
சு. சுரேந்திரன்
பதுளை மாவட்டத்தில் கடந்த சில நாட்களாக பெய்து வரும் கடும் மழையின் காரணமாக, கணவரல்ல பெருந்தோட்டத்தின் மவுசாக்கலை தோட்ட குடியிருப்பு பகுதிகள் பாரிய வெடிப்புகள் காணப்பட்டதால், அதிகாரிகள் உத்தரவையடுத்து, கடந்த நான்காம் திகதி இத்தோட்ட பிள்ளை பராமரிப்பு நிலையத்தில் தங்கவைக்கப்பட்டனர்.
இவர்கள் தற்போது வரை சுமார் ஒரு வாரத்திற்கு மேலாக இந்த பிள்ளை பராமரிப்பு நிலையத்திலே தான் தங்கியிருப்பதாகவும் இதுவரையிலும் தமக்கு எவ்வித நிவாரணங்களும் கிடைக்கவில்லை எனவும் தெரிவித்துள்ளனர்.
அத்துடன், தாம் தங்கியிருக்கும் நிலையத்தில் மலசலக்கூடம், குடிநீர் வசதி போன்ற எவ்வித வசதிகளும் இன்றி தமது சிறு குழந்தைகளுடன் பல சிரமங்களுக்கு தாம் முகங்கொடுப்பதாக தெரிவித்தனர்.
பசறை பிரதேச செயலத்தினாலோ பிரதேச அரசியல்வாதிகள், அல்லது தோட்ட நிர்வாகத்தினாலோ இதுவரையிலும் தமக்கான உதவிகள் எதுவும் வழங்கப்படவில்லை எனத் தெரிவிக்கும் இம்மக்கள், காலை விடிந்ததும் தாங்கள் இருந்த பழைய குடியிருப்புகளுக்கு சென்று அங்கிருந்து சமைத்து, மீண்டும் தாம் தங்கியிருக்கும் நிலையத்திற்கு வந்து பிள்ளைகளுக்கு உணவுகளை கொடுப்பதாகவும் தெரிவித்தனர்.
3 minute ago
24 minute ago
33 minute ago
50 minute ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
3 minute ago
24 minute ago
33 minute ago
50 minute ago