Gavitha / 2020 டிசெம்பர் 01 , பி.ப. 12:53 - 0 - {{hitsCtrl.values.hits}}
நுவரெலியா மாவட்டத்தில், தனிமைப்படுத்தப்பட்டுள் குடும்பங்களுக்கு, அரசாங்க நிவாரணம் வழங்குவதில், பாரபட்சம் காட்டப்படுவதாக, தொழிலாளர் தேசிய சங்கத்தின் பிரதி நிதிச் செயலாளரும் மத்திய மாகாண சபையின் முன்னாள் உறுப்பினருமான சோ.ஸ்ரீதரன் தெரிவித்தார்.
சாமிமலை ஸ்காப்ரோ தோட்டத்தின் தனிமைப்படுத்தப் பட்டுள்ள எட்டுக் குடும்பங்களுக்கு, திகா - உதயா நிவாரண திட்டத்தின் கீழ் நிவாரண பொதிகளை வழங்கி வைத்து கருத்துத் தெரிவிக்கும் போதே, அவர் மேற்கண்டவாறு தெரிவித்தார்.
அவர் மேலும் கருத்துத் தெரிவிக்கையில், நுவரெலியா மாவட்டத்தில் தனிமைப்படுத்தப்பட்டுள்ள குடும்பங்களுக்கு நிவாரணப் பொதிகள் முயைாக கிடைக்காதமையால், பல சிக்கல்கள் எழுந்துள்ளன என்றும் 10 ஆயிரம் ரூபாய் பெறுமதியான உணவுப்பொருள்கள் வழங்கும் திட்டம் முறையாக அமலுக்கு வரவில்லை என்றும் அவர் தெரிவித்தார்.
தனிமைப்படுத்தல் ஆரம்பிக்கப்படும்போதே, நிவாரணப் பொதிகள் வழங்கப்படல் வேண்டும் என்று கூறப்படுகின்ற போதும், மலையகப் பெருந்தோட்டப் பகுதிகளில், இந்த உதவிகள் கிடைப்பதில்லை என்றும் எனவே, இது தொடர்பில் சம்பந்தப்பட்ட அதிகாரிகள் கவனத்தில் கொண்டு, உரிய முறையில் நிவாரணம் சென்றடைய நடவடிக்கை எடுக்கவேண்டும் என்றும் அவர் கோரிக்கை விடுத்துள்ளார்.
22 Jan 2026
22 Jan 2026
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
22 Jan 2026
22 Jan 2026