Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
Editorial / 2018 ஓகஸ்ட் 28 , மு.ப. 11:20 - 0 - {{hitsCtrl.values.hits}}
தலவாக்கலை- வட்டகொடையைச் சேர்ந்த 10 வயது சிறுவனொருவன், மாரவில பகுதியில் அமைந்துள்ள நீச்சல் தடாகத்தில் மூழ்கி உயிரிழந்துள்ளதாக, மாரவில பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
தேவநாயகம் ருசாந்தன் என்ற சிறுவனே இவ்வாறு உயிரிழந்துள்ளார்.
தலவாக்கலை நகரிலுள்ள நகைக்கடை ஒன்றில் பணிபுரியும் பணியாளர்கள், தத்தமது குடும்பத்தினருடன் மாரவில பகுதிக்கு கடந்த 25ஆம் திகதி சுற்றுலா வந்துள்ளதுடன், அங்கு அமைந்துள்ள பிரபலமான ஹோட்டல் ஒன்றிலுள்ள நீச்சல் தடாகத்தில் நீராடியப் போதே, இந்தச் சம்பவம் இடம்பெற்றுள்ளதாகப் பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
குறித்த சிறுவன் நீரில் மூழ்கியதை அவதானித்த அவனது தந்தை , சிறுவனை நீச்சல் தடாகத்திலிருந்து வெளியே எடுத்து, ஹோட்டல் பணியாளர்களுடன் இணைந்து சிறுவனை மாரவில வைத்தியசாலைக்கு கொண்டுச் சென்றுள்ளார்.
இதன் போது சிறுவன் உயிரிழந்துள்ளதாக வைத்தியர்கள் அறிவித்துள்ளதுடன், சம்பவம் தொடர்பான விசாரணைகளை மாரவில பொலிஸார் முன்னெடுத்து வருவதாகத் தெரிவித்துள்ளனர்.
5 hours ago
5 hours ago
6 hours ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
5 hours ago
5 hours ago
6 hours ago