Editorial / 2018 மார்ச் 19 , பி.ப. 05:36 - 0 - {{hitsCtrl.values.hits}}
நுவரெலியா நகரசபைக்குட்பட்ட பகுதிகளில், கடந்த வருடத்தில் மேற்கொள்ளப்பட்ட நீர் மாதிரிகளின் பரிசோதனையின் போது, நீரில் மலம் கலந்திருப்பது தெரியவந்துள்ளதென, நுவரெலியா மாவட்ட சுகாதாரப் பணிப்பாளர் வைத்தியர் சேனக தலகல தெரிவித்துள்ளார்.
நுவரெலியா பிரதேச செயலக கேட்போர் கூடத்தில் அண்மையில் இடம்பெற்ற ஒருங்கிணைப்புக் குழுக் கூட்டத்தின் போதே அவர் இதனைத் தெரிவித்தார்.
நுவரெலியா மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் எம். திலகராஜ், மத்திய மாகாண சபை உறுப்பினர்களான ஆர்.எம்.எஸ்.ரத்னாயக்க, ஜீ.எம்.எம்.பியசிறி ஆகியோரின் தலைமையில் இடம்பெற்ற இக்கூட்டத்தில், அரச அதிகாரிகளும் கலந்துக்கொண்டனர்.
இதன்போது, மேலும் கருத்துத் தெரிவித்த வைத்தியர் சேனக, “ நுவரெலியா பிரதேசத்துக்கு உள்நாட்டு, வெளிநாட்டு சுற்றுலாப் பயணிகள் இலட்சக் கணக்கில் வருகை தருகின்றனர். ஆனால் இதற்கான முறையான நடவடிக்கைகள் இதுவரை மேற்கொள்ளப்படவில்லை. ஒருங்கிணைப்புக் குழுக் கூட்டத்திலாவது இதுதொடர்பில், நடவடிக்கை எடுக்க வேண்டும் என நாம் நினைக்கின்றோம். குறைந்த பட்சம், ஜனாதிபதியின் அவதானத்தைப் பெறுவதற்கு தகுந்த நடவடிக்கைகளை முன்னெடுக்க வேண்டும்" என்று கோரினார்.
நுவரெலியா மாநகரசபைக்கு கிடைக்கும் நிதியை மட்டும் கவனத்தில் கொண்டு செயற்படுவதைத் தவிர, இந்த நீர்க் கட்டமைப்பை அபிவிருத்தி செய்வது தொடர்பில் யாரும் நினைப்பதில்லை என்று குற்றஞ்சாட்டிய அவர், மக்களுக்கு சுத்தமான குடிநீரை வழங்குவதோடு, சுகாதாரத்துறையை மேம்படுத்துவது, நுவரெலியா மாநகரசபையினதும் சுகாதாரப் பிரிவினதும் பொறுப்பாகும் என்று குறிப்பிட்டார்.
"இந்தப் பொறுப்புகளை உள்ளூராட்சி நிறுவனங்கள் தகுந்த முறையில் நிறைவேற்றாவிட்டால், அதில் தலையிடும் அதிகாரம், எமக்கு உண்டு. இந்தக் குழு பரிந்துரை செய்யுமாயின், எந்த நேரத்திலும், நாம் முன்னிற்க தயாராகவிருக்கிறூம்” என அவர் மேலும் கூறினார்.
9 hours ago
9 hours ago
15 Dec 2025
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
9 hours ago
9 hours ago
15 Dec 2025