2026 ஜனவரி 20, செவ்வாய்க்கிழமை

நீர்த்தேக்கத்தில் மிதந்த சிறுத்தையின் உடல்

Ilango Bharathy   / 2021 ஓகஸ்ட் 09 , மு.ப. 07:41 - 0     - {{hitsCtrl.values.hits}}

ரஞ்சித் ராஜபக்ஷ

கெனியன் நீர்த்தேக்கத்தில் உயிரிழந்த நிலையில் மிதந்த சிறுத்தையின் உடல்,
பரிசோதனைக்காக ரந்தெனிகல மிருக வைத்தியசாலைக்குக் கொண்டுச் செல்லப்பட்டுள்ளது.

குறித்த சிறுத்தையின் உடல், நேற்று முன்தினம் (7) ஹட்டன்- நீதவான் நீதிமன்ற நீதிபதி நிமேசா
பட்டபெந்தியிடம் முன்னிலைப்படுத்தப்பட்ட போது, அதனை பரிசோதனைக்காக ரந்தெனிகல
வைத்தியசாலைக்கு அனுப்பும் படி, நல்லதண்ணி வனஜீவராசிகள் அலுவலகத்துக்கு நீதவான்
உத்தரவிட்டுள்ளார்.

6 அடி நீளமும் 3 அடி உயரமுமான 8 வயதான, குறித்த ஆண் சிறுத்தை நீரில் மூழ்கி
உயிரிழந்திருக்கலாம் என, வனஜீவராசிகள் திணைக்கள அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.



மலையகத்தில் பெய்து வரும் கடும் மழை காரணமாக, நிர்நிலைகளின் நீர்மட்டங்கள்
அதிகரித்துள்ளதாகவும் இதற்கமைய கெனியன் நீர்த்தேக்கத்தில் உயிரிழந்த நிலையில் மிதந்த
சிறுத்தையின் சடலம் 6ஆம் திகதி மீட்கப்பட்டதென நல்லத்தண்ணி வனஜீவராசிகள்
அலுவலகத்தின் வனவிலங்குகள் பாதுகாப்பு அதிகாரி பிரபாஸ் கருணாதிலக தெரிவித்துள்ளார்.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X