2025 டிசெம்பர் 18, வியாழக்கிழமை

நீர்வெறுப்பு தடுப்பூசி செலுத்தப்படுகிறது

Gavitha   / 2021 ஜனவரி 05 , பி.ப. 12:30 - 0     - {{hitsCtrl.values.hits}}

ஆ.ரமேஸ்

வீடுகளில் வளர்க்கப்படும் நாய்கள், பூனைகளுக்கு நீர்வெறுப்பு தடுப்பூசிகளைச் செலுத்தும் நடவடிக்கைகளை, நுவரெலியா மாவட்ட சுகாதார திணைக்களம், நேற்று (04) ஆரம்பித்தது.

இதன் முதற்கட்டமாக, கந்தப்பளை பிரதேசத்தில் இச் செயற்றிட்டம் ஆரம்பிக்கப்பட்டுள்ளது என, பிரதேசத்துக்குப் பொறுப்பான பொது சுகாதார பரிசோதகர் டப்ள்யூ.ஜீ.அமில தெரிவித்தார்.

ஒவ்வொரு ஆண்டின் முற்பகுதியிலும் இந்த நடவடிக்கை முன்னெடுக்கப்பட் வந்தது என்றும் கடந்த ஆண்டு ஆரம்பத்தில், கொரோனா வைரஸ் அச்சுறுத்தல் காரணமாக, இந்த நடவடிக்கை சற்று தாமதடைந்திருந்தது என்றும் அவர் தெரிவித்தார்.

இது தொடர்பாக கடந்த வாரம் ஒலிபெருக்கி மூலம் அறிவிக்கப்பட்டிருந்தது என்றும் இதைக் கருத்தில் கொண்டு நூற்றுக்கணக்கான மக்கள், தங்கள் செல்ப்பிராணிகளை அழைத்து வருவதாகவும் அவர் தெரிவித்தார்.

அத்துடன், இந்த தடுப்பூசியை செலுத்திக் கொள்வதற்கு தவறிய பிராணிகளின் உரிமையாளர்களுக்கு, மேலும் ஐந்து நாள்களில் இதைச் செலுத்திக்கொள்ள சந்தர்ப்பம் வழங்கப்பட்டுள்ளது என்றும் அவர் தெரிவித்தார்.

அதேநேரத்தில் அரசாங்க சுகாதாரப் பிரிவு இலவசமாக வழங்கும் தடுப்பூசியை செலுத்தத் தவறும் பிராணிகளின் உரிமையாளர்கள், அவர்கள் வளர்க்கும் பிராணிகளூடாக ஊடாக  ஏதேனும் ஆபத்துகள் ஏற்படும் பட்சத்தில், உரிமையாளர்களுக்கு எதிராக எதிராக சட்ட நடவடிக்கைகள் எடுக்கவும் தண்டப்பணம் அறவிடவும் முடியும் என்றும் அவர் மேலும் கூறினார்.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X